Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசேனாவிற்கு நடந்தது அதிமுகவிற்கும் நடக்கும்.. "3 ஸ்டெப்" விதி.. ஓபிஎஸ், எடப்பாடி! இவருக்கே வெற்றி?

ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளர் செந்திலை வாபஸ் வாங்க சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக கைப்பற்ற போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் நடக்கும் ஓபிஎஸ் - எடப்பாடி இடையிலான மோதலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற விவாதம் உச்சத்தில் உள்ளது. தற்போது சிவசேனா சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவே அதிமுக விவகாரத்திலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துகிறது. இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகி உள்ளார்.

தற்காலிகம்

தற்காலிகம்

ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பாளர் செந்திலை வாபஸ் வாங்க சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவரும் வாபஸ் வாங்கிவிட்டார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு மொத்தமாக வெளியேறி உள்ளது. இரட்டை இலை சின்னம் இப்போதைக்கு தற்காலிகமாக எடப்பாடி தரப்பிடம் உள்ளது. ஓ பன்னீர்செல்வம் வேட்புமனுவில் தற்காலிகமாக கையெழுத்து போடும் உரிமையை இழந்து உள்ளார். ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்து உள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது கேட்க கொஞ்சம் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக இருந்தாலும், எடப்பாடிக்குதான் மறைமுகமாக இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்து இருந்தது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது. இதன் மூலம் கே. எஸ் தென்னரசு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவை பெற்று அதிமுக வேட்பாளர் ஆனார்.

சிக்கல் என்ன?

சிக்கல் என்ன?

தற்போது எடப்பாடி தரப்பிற்கு சின்னம் கிடைத்து உள்ளதால் தேர்தலுக்கு பின்பும் எடப்பாடி தரப்பே சின்னத்தை வெல்லுமா என்று கேள்வி எழுந்துள்ளது. சிவசேனா சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவே அதிமுக விவகாரத்திலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி - ஏக்நாத் ஷிண்டே அணி என்ற இரண்டு அணிகள் உருவாகின. இதில் ஷிண்டே அணி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இதனால் தாக்கரே அணியின் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முறிந்தது. இந்த நிலையில்தான் சிவசேனா சின்னமான வில் அம்பு சின்னத்தையும், கட்சி உரிமையையும் கேட்டு ஷிண்டே தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.

வழக்கு

வழக்கு

இந்த மனுவில்தான் தேர்தல் ஆணையம் ஷிண்டேவிற்கு சின்னத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையம் மூன்று ஸ்டெப்ஸ்களை குறிப்பிட்டு உள்ளது. முதல் விஷயம் யாருக்கு எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர்கள் மெஜாரிட்டி உள்ளது? இரண்டாவது உத்தவ் தாக்கரேவை கட்சி தலைவராகிய போது கட்சி விதிகளில் மாற்றம் முறையாக செய்யப்பட்டதா? மூன்றாவது யார் கொள்கை ரீதியாக சரியாக இருக்கிறார்கள் என்று விசாரிக்கப்பட்டது. இதில் ஷிண்டேவிற்கு மெஜாரிட்டியை இருந்தது. அதோடு உத்தவ் தாக்கரே கட்சி விதிகளில் மாற்றம் செய்தது தவறு என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது உத்தவ் தாக்கரே தன்னிடம் அதிகாரத்தை குவிக்கும்படி விதிகளை மாற்றினார். அதனால் இது தவறு என்று கூறப்பட்டது. கொள்கை ரீதியாக யார் சரியாக இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிமுக

அதிமுக

இதுதான் தற்போது அதிமுகவில் எதிரொலிக்க உள்ளது. அதன்படி மெஜாரிட்டி யாருக்கு இருக்கிறது என்று பார்ப்பார்கள். அதில் எடப்பாடிக்கே மெஜாரிட்டி உள்ளது. அவருக்குத்தான் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர்கள் மெஜாரிட்டி உள்ளது. அது அவருக்கு சாதகமாக இருக்கும். ஆனால் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் ஆக்கிய போது கட்சி விதிகளில் மாற்றம் முறையாக செய்யப்பட்டதா? என்று விசாரிக்கப்படும். சிவசேனா வழக்கில் உத்தவ் தாக்கரே தன்னிடம் அதிகாரத்தை குவிக்கும்படி விதிகளை மாற்றினார். அதனால் இது தவறு என்று கூறப்பட்டது. அதேபோல் எடப்பாடிக்கு எதிராகவும் கூறப்பட வாய்ப்பு உள்ளது. அதாவது ஒரு விஷயம் எடப்பாடிக்கு ஆதரவாகவும் ஒரு விஷயம் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் யாருக்கு ஆதரவாக முடிவு செய்யும் என்று குழப்பம் ஏற்பட்டு உள்ளது. பொதுக்குழு வழக்கில் விசாரணைகள் முடிந்துவிட்டன. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பும் வரும். வழக்கில் தீர்ப்பு வந்ததும் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+