நீர் அடித்து நீர் விலகிடுமா? அழுத்தமாக சொன்ன ஓபிஎஸ்.. ஏங்க அவரே இப்படி பண்ணலாமா? பறந்து போன "பட்சி"!
சென்னை: தமிழ்நாடு அரசின் கிடுகிடு சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது அதிமுக. இதற்காக தேனி மாவட்ட அதிமுகவினர் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
சொத்து வரியை உயர்த்தாவிட்டால் மத்திய நிதி விடுவிக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் மத்திய அரசு நிர்பந்தித்ததால் இப்படி செய்ததாக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டம்
இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது அதிமுக. தேனி மாவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிக்கரமாக நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி விவாதித்தார் ஓபிஎஸ் . சொத்து வரியை திமுக அரசு அராஜகமாக உயர்த்தியிருப்பதை மக்களிடம் பதிய வைக்குமளவுக்கு ஆர்ப்பாட்டம் வலிமையாக நடத்தப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா
இந்த கூட்டத்தில், சசிகலாவை சந்தித்ததால் எடப்பாடியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ஆனால் ஓ ராஜா கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்துக்கு வரலாமா என ஒருநாள் முன்னதாக மாவட்ட செயலாளர் சையதுகானிடம் அவர்கள் கேட்டுள்ளனர். சையதுகானும் ஓபிஎஸ்சிடம் இது குறித்து கேட்டு இருக்கிறார்.

ஓபிஎஸ் என்ன சொன்னார்
அதற்கு ஓபிஎஸ், கட்சியிலிருந்து நீக்கினால் என்ன ? நீர் அடித்து நீர் விலகிடுமா? அதனால், அவர்களையும் வரச்சொல்லுங்கள் என ஓபிஎஸ் அனுமதி கொடுக்க, அதனை நீக்கப்பட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார் சையதுகான். அதனைக் கேட்டு உற்சாகமாக அவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விசயத்தை எடப்பாடியின் கவனத்துக்கு தேனி மாவட்ட நிர்வாகிகள் சிலர் கொண்டு போயிருக்கிறார்கள். தேனியில் இருந்த சில பட்சிகள் பறந்து போய் இதை சேலத்திற்கு கொண்டு சென்றுள்ளனவாம்,.

எடப்பாடி கோபம்
அப்போது, ' கட்சியின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் மற்றவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாதுங்கிறது சொல்லப்பட்டும், ஓபிஎஸ்சே இப்படி நடந்து கொண்டால் எப்படி ? ' என எடப்பாடி வருத்தப்பட்டாராம். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் ஓபிஎஸ் சென்னைக்கு வந்ததும் அவரிடம் இது பற்றி விசாரிப்போம் என்ற நிலையில் இருக்கிறாராம் எடப்பாடி என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவை வீழ்த்தணும்
இந்த நிலையில், ஓபிஎஸ் கூட்டிய கூட்டத்தில் பேசிய சையதுகான், "திமுகவை வீழ்த்தனும்னா அதிமுக வலிமையாகனும். பிரிந்து கிடக்கக் கூடாது. பிரிந்தவர்கள் இணைக்கப்பட வேன்டும் " என ஆவேசமாக பேச, மற்றவர்களும் ஆமோதித்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதத்தில், கூட்டம் முடிந்ததும், " பொறுமையாக இருங்கள் ; நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் நடக்கும் " என அதிமுகவினருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளாராம் ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications