தமிழிசையின் ஜும் மீட்டிங்கில் ஆபாச படம்.. பாதியிலேயே முடிந்த வாக்கு சேகரிப்பு.. யார் அந்த விஷமிகள்?
சென்னை: தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடம் ஜும் மீட்டிங்கில் ஓட்டு சேகரித்தார். இந்த வேளையில் ஆபாச படம் பரப்பப்பட்டதால் மீட்டிங் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனும், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் செல்வி ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இதுதவிர சுயேச்சைகளாக பலர் களமிறங்கி உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழிசை சவுந்தரராஜன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் Zoom மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார். இந்த மீட்டிங்கின்போது ஆபாசமான படங்களை சில விஷமிகள் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த மீட்டிங் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தமடைந்தார். மேலும் இந்த சம்பவத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‛‛மூக்கை துளைத்த அதிரச வாசனை’’.. பிரசார வாகனத்தில் நின்று தமிழிசை செய்ததை பாருங்க! ஒரே கலகலப்பு
இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இன்று Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடி கொண்டிருக்கும்போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவவிட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்’’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் தமிழிசை சவுந்தராஜன் பேசும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் தமிழிசை சவுந்தரராஜன் ஆங்கிலத்தில் பேசுகிறார். அதில் ‛‛வணக்கம், முதலில் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நான் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்ள முடிவு செய்தேன். ஏனென்றால் நான் தென்சென்னை தொகுதியில் அனைத்து இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் எனது நண்பர்களை (பொதுமக்கள்) என்னால் சந்திக்க முடியவில்லை. இதனால் நான் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்ள நினைத்தேன்.
மாறிய முகம்.. கோவையில் திடீரென கால் வலியால் துடிதுடித்த நிர்மலா சீதாராமன்! பதறிய தொண்டர்கள்
அதன்படியே Zoom மீட்டிங்கில் உங்களுடன் நான் இணைந்தேன். தாமரை சின்னத்தில் ஓட்டளித்து எம்பியாக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மீட்டிங்கை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. ஆனால் சில விஷமிகள், எதிரிகள் தலையிட்டு உங்களையும், என்னையும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தவறான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது நமக்கு இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான உறவை பிரிக்காது.
நன்கு படித்த, நேர்மையான நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் அரசியல் என்பது சுத்தமாகும். இதனால் தயவுசெய்து தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள். இன்னொரு நேரத்தில் விஷமிகள் தலையிடு இன்றி நாம் மீட்டிங்கை கனெக்ட் செய்வோம். அதன்மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும், தென்சென்னையின் வளர்ச்சிக்கும் ஒன்றாக இணைவோம். உங்களின் சின்னம் தாமரை. லோக்சபா தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களித்து எனக்கு ஆதரவு தாருங்கள்’’ என தெரிவித்துள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications