நாளை கடல் கொந்தளிக்கும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!
ஃபனி புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை மெரினா உள்ளிட்ட கடல்களில் நாளை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: ஃபனி புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை மெரினா உள்ளிட்ட கடல்களில் நாளை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஃபனி புயல் நாளை அதிதீவிர புயலாக மாற உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஃபனி புயல் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபனி புயல் ஏமாற்றம் அளித்து உள்ளது. இந்த புயல் தற்போது தமிழகத்தை நோக்கி வந்தாலும் நாளை இது திசை மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எப்படி இருக்கும்
இந்த புயலால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு கிடையாது. ஆனால் சென்னையில் கடலோர பகுதிகளில் மட்டும் வேகமாக காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை இந்த புயல் காரணமாக 70கிமீ முதல் 85 கிமீ வரை வேகமாக காற்று வீச வாய்ப்பு இருக்கிறது.

வாய்ப்பு
இதனால் நாளை கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய அனைத்து கடல்களும் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை மீனவர்கள்
இதையடுத்து நாளை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாளை காற்றின் வேகத்தை பார்த்துவிட்டு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை மெரினா
நாளை மட்டுமின்றி நாளை மறுநாளும் கடல் கொந்தளிப்பாகத்தான் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினாவில் பெரிய அலைகள் ஏற்படும். இதனால் சுற்றுலா பயணிகள், மெரினாவை காண செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications