TNEB செய்த மாஸ் சம்பவம்.. இனி பவர் கட் பேச்சுக்கே இடமில்லை! ஒடிசா நிலக்கரி சுரங்கம் நமக்குதான்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வழங்கும் சுரங்கம் ஒன்று தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தொக்காக கிடைக்க இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்று சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு கோடை காலத்திலும் வெப்பம் உச்சம் தொடுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறையும் மாநிலம் முழுவதும் பரவலான இடங்களில் வெப்பம் அதிகமாக பதிவாகியிருக்கிறது. தினமும் குறைந்தபட்சம் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகி வருகிறது. எனவே மக்களின் மின் நுகர்வும் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி தமிழகத்தின் மின் தேவை 20,701 மெகாவாட் ஆகவும், மின்நுகர்வு 454.32 மில்லியன் யூனிட்டுகளாக பதிவானது. அதைத் தொடர்ந்து மே 2ம் தேதி ஒரே நாளில் 20,830 மெகா வாட் மின் தேவை இருந்தது. அதிகபட்ச மின் தேவை பதிவானபோதும் சீரான மின் விநியோகத்தை தமிழக மின் வாரியம் உறுதி செய்தது. மின் தடை ஏற்படாமல் இருக்க காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரமும் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இப்படி இருக்கையில், மின் உற்பத்திக்கு கை கொடுக்கும் வகையில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஒடிசாவின் நிலக்கரி சுரங்கம் ஒன்று தொக்காக கிடைக்க இருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம், 5,120 மெகாவாட் திறனில் 6 அனல் மின் நிலையங்களை இயக்கி வருகிறது. இவற்றிற்கு தேவையான நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி சுரங்கங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தை மத்திய அரசு தொடங்கியது. ஒடிசாவின் 21 கோடி டன் நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் நிலக்கரி சுரங்க ஏலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் பங்கெடுத்திருந்தது.
ஏலத்தை பொறுத்தவரை ஒரேயொருவர் மட்டும் ஏலத்தில் பங்கெடுத்திருந்தால் அவர்களுக்கு சுரங்கம் ஒதுக்கப்படாது. மாறாக 2வது முறை ஏலம் நடத்தப்படும். அப்போதும் ஒருவர் மட்டுமே பங்கேற்றிருக்கிறார் எனில், சுரங்கம் பங்கேற்றவருக்கு ஒதுக்கப்படும்.
சகிகோபால் நிலக்கரி சுரங்க ஏலத்தில் இதே கதைதான் நடந்திருக்கிறது. அதாவது இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டுமே பங்கெடுத்திருந்தது. எனவே இரண்டாவது முறை ஏலம் விடப்பட்டது. அப்போதும் தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டுமே போட்டியில் இருந்ததால், இந்த சுரங்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒதுக்கப்பட இருக்கிறது.
இதன் மூலம் தமிழகத்தின் மின் தேவையை சிறப்பான முறையில் பூர்த்தி செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது மின் இணைப்பு துண்டிப்பும் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications