தீபாவளி நெருங்குற நேரம் பார்த்து.. சர்ரென உயர்ந்தது உணவுப்பொருட்களின் விலை? ஹோட்டலுக்கே போக முடியாது?
சென்னை: சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இது நிம்மதியைத் தரக்கூடும் என்றாலும்.. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசு அறிவிப்பின்படி, சமையல் எண்ணெய், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20% ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி 12.5% லிருந்து 32.5% ஆகவும் அதிகரிக்கும்.

கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மீதான பயனுள்ள வரி முறையே 5.5% லிருந்து 27.5% ஆகவும், 13.75% முதல் 35.75% ஆகவும் அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்கள், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இந்தியாவில் லேபிள் மட்டும் ஓட்டி விற்கப்படும் எண்ணெய்கள் விலை உயரும்.
ஹோட்டல்களில் உணவு விலை: இதன் காரணமாக முக்கியமாக ஹோட்டல்களில் உணவு விலை புதிய உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோட்டல்களில்... முக்கியமாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இப்படி பொருட்களின் விலை உயர்வதால் ஸ்வீட், உணவு பதார்த்தங்களின் விலையும் புதிய உச்சத்தையும் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் விலை உயர்வு:
ஏற்கனவே வெளியான பொருளாதார ஆய்வு 2024 அறிக்கையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (சிஎஃப்பிஐ) அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் கடந்த 2022 நிதியாண்டில் 3.8 சதவீதத்தில் இருந்து 2023 நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது..
கடந்த இரண்டு ஆண்டுகளில் 97 சதவீத உயர்வை உணவு பொருட்கள் சந்தித்து உள்ளன. .
வெப்ப அலைகள், சீரற்ற பருவமழை விநியோகம், பருவகால மழைப்பொழிவு, ஆலங்கட்டி மழை,மற்றும் வறண்ட நிலை - காலநிலை மாற்றத்தால் உணவு விலைகள் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூலை 2023 இல் தக்காளி விலை அதிகரித்தது, பருவகால மாற்றங்கள், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற பயிர் நோய்கள் மற்றும் நாட்டின் வடக்குப் பகுதியில் பருவ மழையின் தாமதம் ஆகியவை தக்காளி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர முக்கிய காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த அறுவடை காலத்தில் பெய்த மழை, வெங்காயத்தின் தரத்தை பாதித்தது. இது வெங்காயம் விலை உயர முக்கிய காரணமானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாத காரணத்தால், பருப்பு வகைகள், குறிப்பாக துவரம் பருப்பு விலை உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. இதன் உணவுப் பணவீக்கம் கடந்த 2022 நிதியாண்டில் 3.8 சதவீதத்தில் இருந்து 2023 நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், 2024ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இது நிம்மதியைத் தரக்கூடும் என்றாலும்.. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications