பழைய பென்ஷன் திட்டத்தில் இருக்கும் அந்த 3 மேஜிக்.. புதிய திட்டத்தை விட இது ஏன் கெத்து தெரியுமா? செம
சென்னை: பழைய பென்ஷன் திட்டம் மற்றும் புதிய பென்ஷன் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான போர் இன்றும் ஓய்ந்தபாடில்லை.. பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லப்போனால், இது ஒரு பாதுகாப்பான வாழ்க்கைக்கும் ஒரு நிச்சயமற்ற முதலீட்டுக்கும் இடையேயான போட்டி எனலாம்.. இதனால் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பணப்பலன்கள், எதிர்நோக்கும் சிக்கல்? என்னென்ன?
இன்றைய அரசு ஊழியர்களின் மிகப்பெரிய கவலையே அவர்களின் ஓய்வுக்கால வாழ்க்கை தான்.. ஒரு காலத்தில் அரசு வேலை என்றாலே "ரிட்டையர் ஆன பிறகு நிம்மதியாக இருக்கலாம்" என்ற எண்ணம் இருந்தது.. ஆனால் 2004-ம் ஆண்டுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது..

பழைய பென்ஷன் திட்டம்
பழைய பென்ஷன் திட்டம் என்பது ஒரு ஊழியருக்கு அரசு கொடுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.. இதில் ஊழியரின் சம்பளத்திலிருந்து ஒரு பைசா கூட பென்ஷனுக்காகப் பிடிக்கப்படாது.. அவர் ஓய்வு பெறும்போது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் தொகையை பென்ஷனாகப் பெறலாம். அதோடு விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படியும் (DA) உயர்ந்து கொண்டே இருக்கும்.
ஒருவேளை ஊழியர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு அந்த பணம் கிடைக்கும்.. அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான வருமானம் வரும் என்ற மிகப்பெரிய தைரியம் இதில் இருக்கிறது.. இதனால்தான் இன்றும் பல மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட்டங்கள் நடக்கின்றன.
புதிய ஓய்வூதியத் திட்டம்
ஆனால் புதிய பென்ஷன் திட்டம் என்பது முற்றிலும் மாறுபட்டது.. இதில் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் தொகையை பிடித்து, அதே அளவு தொகையை அரசும் முதலீடு செய்யும்.. இந்த ஒட்டுமொத்தப் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
பங்குச்சந்தை ஏறி இறங்குவதை பொறுத்தே ஓய்வுக்காலப் பணம் அமையும்.. அதாவது நீங்கள் ஓய்வு பெறும்போது பங்குச் சந்தை வீழ்ச்சியில் இருந்தால், உங்களுக்குக் கிடைக்கும் பென்ஷன் தொகையும் மிகக் குறைவாகவே இருக்கும்.. இதில் நிலையான வருமானத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.. அரசு ஊழியர்கள் இதனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணமே இந்த நிச்சயமற்ற தன்மைதான்..
தமிழக அரசு ஊழியர்கள்
அரசாங்கத்தை பொறுத்தவரை பழைய பென்ஷன் திட்டம் என்பது மிகப்பெரிய நிதிச் சுமை. எதிர்காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பென்ஷன் கொடுக்க வேண்டியிருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அரசு கருதுகிறது.
அதனால்தான் சிபிஎஸ் (CPS) எனப்படும் இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் ஊழியர்களின் தரப்போ, "நாங்கள் 30 வருடங்கள் உழைப்பது எங்கள் முதுமைக்கால நிம்மதிக்காகத்தான்.. அதை எப்படி ஒரு சூதாட்டம் போன்ற பங்குச் சந்தையிடம் ஒப்படைக்க முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார்கள்..
சுருக்கமாக சொன்னால், பழைய பென்ஷன் திட்டம் என்பது ஒரு ஆலமரம் போன்றது, அது எப்போதும் நிழல் தரும்.. புதிய பென்ஷன் திட்டம் என்பது ஒரு செடி போன்றது, அதற்கேற்ற கிளைமேட் இருந்தால் மட்டுமே பலன் தரும். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,தமிழகத்திலும் இது ஒரு முக்கியமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக மாறியிருக்கிறது.
ஊழியர்களின் இந்த நீண்ட காலப் போராட்டம் வெற்றி பெறுமா அல்லது பங்குச் சந்தையின் பிடியில் பென்ஷன் சிக்கிக் கொள்ளுமா என்பது வரும் காலங்களில் தான் தெரியவரும்..!!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications