Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்க! கருத்துகேட்பு கூட்டத்தில் ஒன்று திரண்ட அரசு ஊழியர் சங்கங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் குழுவினர், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் முதற்கட்ட கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அமைத்த குழுவிடம் அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வலியுறுத்தியதுடன், தங்களது கருத்துகளையும் அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..

Old pension Scheme TN Government employees

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், அதை ஏற்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறந்த ஓய்வூதிய திட்டம்

இதையடுத்து தமிழகத்தில் சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், 6 மாதங்களுக்கு முன்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தன்னுடைய அறிக்கையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவினர், 4 கட்டங்களாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்க முடிவெடுத்துள்ளனர். அதாவது ஆகஸ்ட் 18, 25, செப்டம்பர் 1, 8 என 4 நாட்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த முடிவாகியிருக்கிறது.

முதல் கருத்து கேட்பு கூட்டம்

அந்தவகையில், முதற்கட்ட கருத்து கேட்பு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் 2 பேர் வீதம் அனுமதிக்கப்பட்டு, 3 நிமிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

நேற்று நடநத் முதல் சுற்று கூட்டத்தில், தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்பட 40 சங்கங்களின் நிர்வாகிகள் குழுவின் தலைவரான ககன்தீப் சிங் பேடியை சந்தித்து மனு அளித்தனர். அப்போது அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்

இது குறித்து, தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் சொன்னபோது, "பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அன்று முதல், அதை எதிர்த்து போராடி வருகிறோம். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய, ஜெயலலிதா தலைமையிலான அரசு, சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தது; அவர் அறிக்கை கொடுக்கவில்லை.

இதையடுத்து, மற்றொரு IAS அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு, பழனிசாமி ஆட்சியில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது; நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது; அந்த அறிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. இப்போது, ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. காலம் கடத்தாமல், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அரசும் அதே வேகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை, தீபாவளி பரிசாக வெளியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் கிடைக்கவில்லை

இதையடுத்து, தலைமைச் செயலக சங்க மாநில தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கையில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது 100 சதவீதம் சாத்தியமே. சிபிஎஸ் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 45,625 பேருக்கு ஒரு பைசாகூட ஓய்வூதியமாக கிடைக்கவில்லை. அரசுக்கு கூடுதல் செலவினம்தான் ஏற்படும். எனவே அத்திட்டத்தை அரசு பரிசீலிக்கக் கூடாது.

சிபிஎஸ் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களை சேமநல நிதி திட்டத்தில் (ஜிபிஎப்) இணைத்து, அனைவரையும் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்கீழ் கொண்டு வர வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் ஏற்கெனவே ஓய்வுபெற்றவர்களுக்கும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பணிக்கொடை வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கவுரவ தலைவர் அ.மாயவன், தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் எஸ்.பிரபாகரன், பொதுச்செயலாளர் பொ.அன்பழகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில் ஆகியோர் அளித்த அறிக்கையில், "நிதி பற்றாக்குறையால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்று வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+