அப்படி போடு.. அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. அலசி ஆராயும் அரசு.!
சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தர தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த குழு விரைவில் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
2003 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அந்த ஆண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையிலேயே பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக ஆட்சி மாறி மாறி தமிழகத்தில் அமைந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.

2001 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டுமென அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆராய மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அந்த குழு ஒன்பது மாதங்களில் அறிக்கை தரவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பு இருக்கும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாகவாவது ஏதாவது அறிவிப்பு இருக்கும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதுபோன்ற எந்த அறிவிப்பும் வராதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்கள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த பிப்ரவறி 5ஆம் தேதி, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
அதில், ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ், கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics, பிரத்திக் தயள் ஐஏஎஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அந்த குழு விரிவாக ஆராய்ந்தது. மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. மேலும் தற்போது ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாகவும் நிபுணர் குழு விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது. தொடர்ந்து இந்த குழு விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பிருப்பதாகவும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும் என்கின்றனர் அரசு தரப்பு அதிகாரிகள்.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications