அந்த வார்த்தையை எந்த நேரத்தில் சொன்னாரோ.. மயில்சாமிக்கு இப்படி ஆகிவிட்டதே!.. ரசிகர்கள் கண்ணீர்
நடிகர் மயில்சாமி தனது இறப்பை முன் கூட்டியே கணித்த வீடியோ வேகமாக பரவுகிறது
சென்னை: மயில்சாமி தனது இறப்பை முன் கூட்டியே கணித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு வருகிறார்கள்.
கடந்த 4 நாட்களாக நடிகர் மயில்சாமி குறித்த பேச்சுதான் இருக்கிறது. ஒருவர் வாழும் போது பேசுவதை விட அவர் இறந்தபின்னும் அவரை பற்றி நேர்மறையாக பேசுவது என்பது பாக்கியம்தான். அந்த வகையில் நடிகர் மயில்சாமி செய்த புண்ணியம்தான் அவரது இறப்புக்கு வந்த கூட்டமும், கதறிய பொதுமக்களும்!
தனக்கு மிஞ்சிதான் தானம் என்பதையும் மிஞ்சியவர் மயில்சாமி என சொன்னால் மிகையாகாது. இந்த கருத்தை மறைந்த சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ நடிகர் விவேக் ஒரு விழாவில் தெரிவித்திருந்தார்.

ஷீரடி சாய்பாபா
அதில் விவேக் கூறுகையில் ஒருத்தர் ஷீரடி சாய்பாபா மாதிரி ஒரு பணக்காரனாகவும் மறுநாள் ஏழையாகவும் இருப்பார். அவர்தான் மயில்சாமி. ஒரு நாள் தனக்கு கிடைத்த ரூ 10 ஆயிரம் ஊதியத்தை என் கண் எதிரே யாருக்கோ உதவி செய்துவிட்டார். பிறகுதான் அவர் கையில் ஆட்டோவுக்குக் கூட காசில்லை என்பது தெரிந்தது.

ஆட்டோவுக்கு காசு
இதையடுத்து என்னிடம் ஆட்டோவுக்கு காசு வாங்கிக் கொண்டு வீடு போய் சேர்ந்தார். அந்தளவுக்கு உதவி உதவி உதவி என யாருக்காவது உதவி செய்து கொண்டே இருப்பார் என்றார். மயில்சாமியின் பேக்கிரவுண்டை பார்த்தால் அவர் பரம்பரை பணக்காரரோ பிறவி பணக்காரரோ இல்லை. கஷ்டப்பட்டு உழைத்த ஊதியத்தில்தான் அனைவருக்கும் உதவியுள்ளார்.

ஒரு ரூபாய் நாணயம்
நெற்றியில் வைக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை கூட எடுத்துவிடும் இந்த காலத்தில் பணத்தின் மீது கொஞ்சமும் ஆசை இல்லாமல் இருந்தார் என்றால் மயில்சாமி நிச்சயம் அனைவருக்கும் உதாரணமாகவே இருந்துள்ளார். அவர் இறந்தும் முன்னுதாரணமாக வாழ்கிறார். இப்படிப்பட்ட வள்ளல் குணம் கொண்ட மயில்சாமி கடந்த சிவராத்திரி அன்று கேளம்பாக்கம் கோயிலில் இரவு முழுவதும் வழிபாடு நடத்திவிட்டு வீடு திரும்பினார்.

நெஞ்சு வலி
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வரும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு திங்கள்கிழமை அன்று வடபழனி ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலம்
இவரது இறுதி ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் அவர் இறப்பு குறித்து ஏற்கெனவே பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஒரு விழாவில் மயில்சாமி பேசுகையில் அதிக நாட்கள் நான் உயிருடன் இருக்க வேண்டும் என ஆசைப்படவில்லை. ஆனால் நான் இருக்கும் வரையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இதுதான் என்னுடைய ஆசை என கூறியிருந்தார்.

வேகமாக பரவும் வீடியோ
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களோ அதிக நாள் வாழ ஆசையில்லை என எந்த நேரத்தில் அவர் கூறினாரோ அது பலித்துவிட்டதே என கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்த மனிதரை இனி எப்போது காண்போம் என அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு ஒரே வழி, மயில்சாமி இறந்தும் ஏழை மக்களின் கஷ்டங்கள் சூரியன் வந்தால் காணாமல் போகும் பனி போகும் விலகுவதற்கான தெம்பையும் எதிர்நீச்சல் போடும் மன தைரியத்தையும் கொடுப்பார் என நம்புவோம்.












Click it and Unblock the Notifications