ஓமலூர் காதலிக்கு காஸ்ட்லி பரிசு தர போன தவெக நபர்.. அதுக்காக செய்த காரியத்தை பாருங்க.. வெளுத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை வகித்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, அவரது சொந்தக் கட்சியினரே பெரும் தலைவலியைத் தரத் தொடங்கியுள்ளனர். "பெண்களுக்குப் பாதுகாப்பு" என்பதைத் தனது அரசியல் முழக்கங்களில் ஒன்றாக முன்வைக்கும் விஜய்யின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் வகையில், சேலத்தில் நடந்த சம்பவம், மீண்டும் கட்சி தலைமையைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்து உள்ளது கரிசல்பட்டி கிராமம்.. இந்த கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற விவசாயி தனது வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வருகிறார்.

Omalur Youth

சேலம் ஓமலூர் காதலி

வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுப் பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் கிராமமே அமைதியில் மூழ்கியிருந்த வேளையில், அதிகாலை நேரத்தில் அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் நைசாக ஆட்டுப் பட்டியின் வேலியை உடைக்கத் தொடங்கியுள்ளனர்.

அவர்கள் ஆடுகளை திருடிச் செல்ல முயன்றபோது, அங்கு கட்டப்பட்டிருந்த நன்றியுள்ள நாய்கள் சில நொடிகள் கூட தாமதிக்காமல் ஆக்ரோஷமாக குரைக்கத் தொடங்கின. நாய்களின் தொடர் குரைப்பு சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த விவசாயி மணி, ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்து பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்துள்ளார்.

ஆடு திருடிய தவெக நபர்

அப்போது 2 பேர் பட்டியில் இருந்த ஆடுகளை திருடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கொஞ்சமும் யோசிக்காமல் திருடன் திருடன் என சத்தமாக கூச்சலிட்டார்.

மணியின் அலறல் சத்தம் கேட்டு சுதாரித்துக் கொண்ட அக்கம் பக்கத்தினர், அடுத்த சில நிமிடங்களில் திரண்டு வந்து தப்பியோட முயன்ற அந்த இரண்டு பேரையும் நாலாபுறமும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பொதுமக்கள் தங்களை சுற்றி வளைத்ததை கண்டதும், பிடிபட்ட அந்த இளைஞர் சற்றும் பயமில்லாமல், தான் ஒரு பிரபல அரசியல் கட்சியான தவெக நிர்வாகி என்றும், தன்னை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் கூறி பொதுமக்களையே மிரட்டும் தோணியில் சவால் விட்டுள்ளார்.

காஸ்ட்லி பரிசு காதலிக்கு

திருடியது இல்லாமல், இவ்வளவு தைரியமா என்று ஆத்திரமடைந்த கிராம மக்கள், நீ யாராக இருந்தால் எங்களுக்கு என்ன என்று கூறி அந்த இளைஞருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

பிறகு இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்த இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட வாலிபர் செங்கானூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் தனுஷ் (21) என்பதும், அவருடன் இருந்தது 15 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், தனுஷ் தனது காதலிக்கு விலை உயர்ந்த ஆடம்பர பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து இம்ப்ரெஸ் செய்வதற்காகவே இந்த திருட்டுத் தொழிலில் இறங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக்கேட்டு போலீசாரே வாயடைத்து போய்விட்டார்களாம்

பிடிபட்ட தனுஷ் - விசாரணை

சமீபகாலமாக கரிசல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் திருடு போயுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பிடிபட்ட தனுஷ் மற்றும் அந்த சிறுவனுக்கு முந்தைய திருட்டுச் சம்பவங்களிலும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்கு பரிசு தர ஆடு திருடி, அரசியல் பில்டப் கொடுத்த வாலிபர் சிக்கிய சம்பவம் ஓமலூரில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

தவெக நிர்வாகிகள் மீது புகார்கள்

இப்படி த.வெ.க. நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் எழுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே திருவள்ளூர் த.வெ.க. வேட்பாளர் அருண்குமார் மீது நடிகை சாந்தினி கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதேபோல பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பிரகாசம் என்பவர் மீதும் அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் சீண்டல் புகாரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சென்று அளித்திருந்தார்..

கடந்த மாதம்கூட, சென்னை காசிமேடு த.வெ.க. 43-வது வார்டு வட்டச் செயலாளர் தினேஷ் (என்கிற பாம்பு தினேஷ்) சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், போக்சோவில் கைதாகினார். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் எல்லாம், கட்சி நிர்வாகத்திற்குள் மகளிர் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+