Omicron: 5 வார்னிங் அறிகுறிகள்.. ஓமிக்ரான் குறித்து எய்ம்ஸ் விடுத்த முக்கிய எச்சரிக்கை.. கவனம்!
சென்னை: தீவிர ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 5 கடுமையான அறிகுறிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எய்ம்ஸ் டெல்லி தெரிவித்துள்ளது. இந்த 5 அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் நாளுக்கு நாள் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் இதுவரை 35,367,760 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 484,471 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் நேற்று மட்டும் 141,374 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓமிக்ரான் அறிகுறி
ஓமிக்ரான் எவ்வளவு தீவிரம் கொண்டது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஏனென்றால் உலக சுகாதார மைய அதிகாரிகள் கூற்றுப்படி, ஓமிக்ரானை மைல்ட் வகை கொரோனா என்று நம்பி ஏமாந்து விட கூடாது. அதை சாதாரணமாக, அலட்சியமாக நினைத்துவிட கூடாது என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மருத்துவ வல்லுனர்கள், ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது. ஆனால் இது வலிமையானது இல்லை. இதை பார்த்து அச்சப்பட தேவை இல்லை என்று கூறி வருகிறார்கள்.

இந்தியா ஓமிக்ரான்
இதனால் ஓமிக்ரானை பார்த்து பயப்படலாமா வேண்டாமா என்ற குழப்பம் மக்கள் இடையே எழுந்துள்ளது. ஓமிக்ரான் ஏற்பட்டால் மொத்தம் 8 விதமான அறிகுறிகள் தோன்றும். தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இதுதான் இதுவரை உலகம் முழுக்க ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களிடம் பொதுவாக தோன்றும் அறிகுறிகள் ஆகும்.

கொரோனா வைரஸ் எய்ம்ஸ்
இது போக கடந்த சில நாட்களுக்கு முன் ஓமிக்ரான் ஏற்படும் நபர்களுக்கு வாந்தி மற்றும் பசியின்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. The ZOE என்று கொரோனா சோதனை அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த இரண்டு புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் பலருக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அந்த அறிகுறிகள் லிஸ்டில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் 5 ஆபத்தான ஓமிக்ரான் அறிகுறிகளை எய்ம்ஸ் பட்டியலிட்டுள்ளது.

ஓமிக்ரான் 5 அறிகுறிகள் எய்ம்ஸ்
பின் வரும் 5 ஓமிக்ரான் அறிகுறிகள் ஏற்பட்டால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் ஆக்சிஜன் அளவு சட்டென குறைவது. மற்ற ஓமிக்ரான் அறிகுறிகள் உள்ளவர்கள் தொடர்ந்து தங்கள் ஆக்சிஜன் அளவை சோதிக்க வேண்டும்.

நெஞ்சுவலி
திடீரென நெஞ்சில் வலி ஏற்படுவது. அல்லது நெஞ்சில், இதயத்தில் ஒரு அழுத்தம் ஏற்படுவது மோசமான ஓமிக்ரான் அறிகுறிகளில் ஒன்று. இது ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அது போக மனக்குழப்பம் அல்லது பாலியல் ரீதியாக உணர்வு குழப்பம் ஆகியவையும் மோசமான ஓமிக்ரான் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. ஓமிக்ரான் அறிகுறிகள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.

சுருக்கமான விளக்கம்
எய்ம்ஸ் குறிப்பிட்டு இருக்கும் 5 கடுமையான ஓமிக்ரான் அறிகுறிகள்
மூச்சு விடுவதில் சிக்கல்
உடலில் ஆக்சிஜன் அளவு சட்டென குறைவது
திடீரென நெஞ்சில் வலி ஏற்படுவது அல்லது நெஞ்சில், இதயத்தில் ஒரு அழுத்தம் ஏற்படுவது
மனக்குழப்பம் அல்லது பாலியல் ரீதியாக உணர்வு குழப்பம்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications