2000 ரூபாய் நோட்டு இன்று முதல் செல்லாது.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் அறிவிப்பு
சென்னை: ஆம்னி பேருந்துகளில் இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு நாளையுடன் கடைசி நாளாகும்.
இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 28ஆம் தேதிக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறி இருந்த நிலையில். ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக 90 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. 10% மட்டுமே பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய நேரில் வந்து புக்கிங் செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் மத்திய அரசின் கெடு நிறைவடைந்த நிலையில், இன்று முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும். தொடர்ந்து உங்கள் நல் ஆதரவையும். பயணத்தையும். எங்கள் அனைத்து ஆம்னி பேருந்துகளில் தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள், 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தாண்டி காலம் நீட்டிக்கப்படுமா எனத் தெரியவில்லை.
ஒருவேளை காலம் நீட்டிக்கப்படாவிட்டால் உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டு செல்லாமல் போகும் அபாயம் ஏற்படலாம் என்பதால் விரைவில் பணத்தை மாற்றிக் கொள்ளவும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பலரும் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றி வந்தனர்.
அரசு பேருந்துகளிலும் பெட்ரோல் பங்க்குகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றி பலரும் டிக்கெட் பெற்று வந்தனர். ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு, இன்னும் 2 நாட்களில் முடிகிறது. இந்த வாரத்தில் இன்றும் 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே வங்கிகள் இயங்கும் என்பதால் செப்டம்பர் 28ஆம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
பெட்ரோல் பங்க்குகளில் 29ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் வங்கிகளில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆம்னி பேருந்துகளிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற நாளை ஒருநாள் மட்டுமே காலக்கெடு உள்ளது. இன்றும் நாளையும் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும். எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை அரசு நீட்டிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications