கிளாம்பாக்கத்தில் இடமில்லை! முடிச்சூரில் முடியவில்லை! தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து ஓனர்கள் கோரிக்கை
சென்னை: கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க கால அவகாசம் கேட்டு உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், வடமாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஏற்கெனவே பூக்கடையில் இருந்த பேருந்து நிலையத்தை கூட்ட நெரிசலால்தான் கோயம்பேட்டுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் கோயம்பேட்டிலும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகளால் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. இதனால் பல மணி நேரம் பேருந்துகளும் அவ்வழியாக செல்லும் வாகனங்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய நேரம் அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், கும்பகோணம் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளிட்டவை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டன.
வடமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு கோயம்பேட்டிலிருந்தே இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கிளாம்பாக்கத்திலிருந்தே எல்லா பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ள இடத்திற்கு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு வருவது நடைமுறையில் சாத்தியமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
இது ஒரு புறம் இருந்தாலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர். எல்லா பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 24 ஆம் தேதி முதல் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்னும் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் கட்டி முடிக்கப்படவில்லை. அது வரை ஆம்னி பேருந்துகளை முடிச்சூரில் நிறுத்தி வைத்து கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதிகள் மட்டுமே இருக்கின்றன.
தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இருந்து வரக் கூடிய ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க அங்கு இட வசதி இல்லை. கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தி வைப்பதற்கான நிறுத்துமிடங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்க கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இது கட்டி முடிக்கப்படும் வரை கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முடிச்சூரில் பேருந்து நிறுத்தம் கட்டி முடித்தவுடன் அங்கிருந்து பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications