தனி பெர்மிட் வேணுமாம்.. ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் வைத்த கோரிக்கையை.. பாருங்களேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல், தீபாவளிக்கு அநியாய கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்த தமிழக ஆம்னி பேருந்துகள், இரு தினங்களுக்கு முன்னர் கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு என தனி பெர்மிட் வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு போக வேண்டும் எனில் அரசு A/C பேருந்தில் ரூ.570 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். தீபாவளியாக இருந்தாலும் சரி, பொங்கலாக இருந்தாலும் சரி டிக்கெட் விலை இதுதான். இதுவே ஏசி வசதியில்லாத பேருந்தில் ரூ.450 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், இந்த நாட்களில் ஆம்னி பேருந்துகள் எனில் ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

Omni bus tamil nadu kerala

ஆம்னி பேருந்துகளின் ஆட்டம்

இவ்வளவு விலை கொடுத்து ஆம்னி பேருந்துகளில் போக முடியாமல் பெண்களும், குழந்தைகளும் நள்ளிரவு வரை மணிக்கணக்கில் காத்திருந்து அரசு பேருந்துகளில் பயணித்து வருகிறார்கள். ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கட்டண கொள்கை குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தாலும், கட்டண கொள்கை தடுக்கப்படுவதில்லை. இப்படி இருக்கையில்தான் சபரிமலை சீசன் தொடங்கிவிட்டது, கல்லா கட்டிவிடலாம் என்று, ஆம்னி பேருந்துகள் அடித்து பிடித்து டிக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்குள் நுழைந்தன. அங்குதான் அதிர்ச்சி காத்திருந்தது.

அபராதம் போட்ட கேரளா

தமிழகத்தை சேர்ந்த ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து விதிகளை மீறியிருப்பதாக கூறி, பேருந்துக்கு தலா ரூ.2 லட்சம் என 30 பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் போட்டிருக்கிறது கேரள போக்குவரத்து துறை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், இனி நாங்கள் கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியிருக்கின்றன. இரண்டாவது நாளாக இன்றும் கேரளாவுக்குள் பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கின்றன.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை

இந்நிலையில், மத்திய அரசு ஆம்னி பேருந்துத் துறைக்கு தனியான பெர்மிட் வழங்க வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் அறிக்கை விடுத்திருக்கிறார். அப்படியெல்லாம் எந்த பர்மிட்டும் வழங்க வேண்டியதில்லை. ஏற்கெனவே கொடுத்த பெர்மிட்டில் அவர்கள் பஸ்களை இயக்கினால் போதும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் இயக்கப்படும் பஸ்களை மூன்று பிரிவாக பிரித்துவிடலாம்.

1. அரசு பேருந்துகள்
2. தனியார் பேருந்துகள்
3. ஆம்னி பேருந்து

அரசு பேருந்துகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். குறிப்பிட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட எண் கொண்ட பேருந்துகள் என, தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்கள், மலை கிராமங்களை இந்த பேருந்துகள் நகரங்களுடன் இணைக்கின்றன. லாபம், நஷ்டம் எல்லாம் கணக்கு கிடையாது. சேவைதான் பிரதான நோக்கம்.

என்ன பிரச்சனை

தனியார் பேருந்துகளை பொருத்தவரையில் சேவை மனப்பான்மை எல்லாம் கிடையாது. டிக்கெட் இருந்தால் வண்டி ஓடும். டிக்கெட் இல்லையெனில் அந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்துகள் முன்வராது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ஸ்டேஜ் பர்மிட் வழங்கப்படும். அதாவது சென்னையில் புறப்படும் இந்த பேருந்துகள் மதுரை வரை இயக்கப்படும் எனில், வழியில் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி கொள்ளலாம். இருக்கைக்கு இவ்வளவு டிக்கெட் என்று வசூலித்துக்கொள்ளலாம்.

அபராதம் ஏன்

இது இரண்டிலும் மாறுபட்டதுதான் ஆம்னி பேருந்துகள். இவைகளுக்கு ஸ்டேஜ் பர்மிட் வழங்கப்படாது. மாறாக ஒப்பந்த பேருந்துக்கான பெர்மிட் கொடுக்கப்படும். அதாவது ஆம்னி பேருந்துகள் இருக்கைக்கு இவ்வளவு டிக்கெட் என்று வசூலிக்க கூடாது. மாறாக மொத்தமாக ஆட்களை ஏற்றி சபரிமலைக்கு கொண்டு சென்று திரும்ப அவர்களை அழைத்து வர வேண்டும். அது இல்லாமல் வழியில் குமுளியில் 4 பேர், வண்டி பெரியாரில் 8 பேர் என இறங்கி ஏறக்கூடாது.

ஆனால் தமிழக ஆம்னி பேருந்துகள் இருக்கைகளுக்கு டிக்கெட் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்குள் நுழைந்தன. இதனால் அம்மாநில போக்குவரத்துத்துறை அபராதங்களை விதித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+