Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்னி பஸ் vs அரசு பஸ்.. வெளிநாடு செல்வது போல் மாறிய சொந்த ஊர் பயணம்.. கூட்டிக்கழிச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்து ஊருக்கு போவதே வெளிநாடு போவது போல் மாறியிருக்கிறது.. பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் உள்ள கட்டணத்தை பார்க்கும் போது, அரசு பேருந்துகளின் அவசியத்தை உணர்த்துகின்றன. அரசு பேருந்துகள் தான் சாமானியர்களின் சொந்த ஊர் கனவை நினைவாக்கி உள்ளது.

சென்னையில் வாழும் பெரும்பாலான மக்கள் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார். சொந்த ஊரை விட்டு பலரும் வேலை தேடி சென்னை வந்தவர்கள்.. சென்னையிலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்கள்..சென்னையில் இருந்து பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்வது என்பது உண்மையில் இவர்களுக்கு கொடுமையானது.

Omni Bus vs Govt Bus: Travel to hometown changed like going abroad in pongal festival

முதல் பிரச்சனையே விடுமுறை தான்.. குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்.. ஆனால் தனியார் நிறுவனங்களில் அலுவலகங்களில் வேலை செய்வோருக்கு விடுமுறை அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. கடைசி நேரத்தில் தான் யார், யார் ஊருக்கு போக முடியும் என்பது தெரியும். அப்படியே அடித்து பிடித்து விடுமுறை வாங்கினாலும், ரயில்களில் பயணிக்க நினைத்து பார்க்கவே முடியாது. ஏனெனில் ரயில்களில் 4 மாதம் முன்பே டிக்கெட் முடிந்துவிடும். ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பயமுறுத்தும்... குறைந்த பட்சம் ஆம்னி பேருந்துகளில் சராசரியாக 1500 முதல் 2000 வரை கட்டணம் இருக்கும்.

சென்னையில் இருந்து மதுரைக்கு 4 பேர் சென்றாலே ஒரு முறை பயணத்திற்கு 6000 முதல் 8000 கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். ஊர் போய்விட்டு திரும்பும் போதும், இதேபோல் 8 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டியது வரும். இதுதவிர ஊருக்கு போகும், பழம், ஸ்வீட், சாப்பாடு என செலவு கண்டிப்பாக அதற்கு 2000 வரை தாராளமாக வரும். ஊரில் போய் கறி எடுத்தால் 1000, ஒரு தங்கி சுற்றுலா சென்றால் தனியாக அதற்கு10000 வரை செலவு ஆகும். கிட்டத்தட்ட 20000 முதல் 30000 வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும். இந்த பணத்தில் சிங்கப்பூருக்கோ, தாய்லாந்திற்கோ ஜாலியாக டூர் போய்விட்டு நீங்கள் போய்விட்டு வந்துவிடலாம். அந்த அளவிற்கு பணம் செலவாகும்..

அதேநேரம் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் வெறும் 500 ரூபாய்க்குள் தான் டிக்கெட் என்பதுடன், குழந்தைகளுக்கு அரை கட்டணம் தான். இதனால் பேருந்துக்காக செலவு செய்யும் தொகை 3 மடங்கு குறையும். கிட்டத்தட்ட 16000 கட்டணம் 4000 ஆயிரத்திற்குள்ளேயே முடியும். அரசு பேருந்துகள் ஸ்டிரைக் என்று அறிவிக்கப்பட்டு ஒரு வேளை ஸ்டிரைக் தொடர்ந்து இருந்தால் விமானக்கட்டணத்தையே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விஞ்சியிருக்கும்.. நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை..

சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் கூட, நேராக கோயம்பேடு போய் சிறப்பு பேருந்துகளில் ஏறி சொந்த ஊர் போய்விட முடியும். என்ன கொஞ்சம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். சொந்த ஊருக்கு சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரம் கிளாம்பாக்கத்தில் இப்போது தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் ஓட்டல்கள் பல்லாயிரம் பேரை கையாளும் வகையில் அதிக அளவு இல்லை.. எனவே முடிந்தவரை வெளியிலேயே வாங்கி செல்வது நல்லது. அதேபோல் பேருந்தில் ஏறிவிவட்டு அதன்பின்னர் போகும் வழியில் சாப்பிடலாம் என்ற எண்ணம் இருந்தால், அதை தவிர்த்துவிடுங்கள்... வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து சென்றுவிடுங்கள் அல்லது உங்கள் பகுதியிலேயே வாங்கி கொண்டு பயணியுங்கள்.. அதுவே சிரமங்களை குறைக்க உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+