அப்படி போடு.. சென்னையில் மூடப்படும் மிகப்பெரிய டோல் கேட்.. மக்களின் பல நாள் கோரிக்கை நிறைவேறுது!
சென்னை: சென்னையில் உள்ள மிகப்பெரிய டோல் கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. சுங்கச்சாவடியில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துங்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது..

டோல் பிளாசாவில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உள்ளூர் குடியிருப்போர் சங்கங்கள் பல கோரிக்கை வைத்தன. இங்கே பயணம் செய்யும் மக்கள் பலரும் பல காலமாக இதே கோரிக்கையை வைத்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டு உள்ளது. ஆனால் மெட்ரோ பணிகள் முடிந்து 1 - 2 வருடம் கழித்து மீண்டும் இங்கே டோல் பிளாசா திறக்கப்பட வாய்ப்புள்ளது.
மெட்ரோ: சுங்கச்சாவடியை மூடுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். உரிய அனுமதி கிடைத்தவுடன் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 2024 வருடம் திறக்கப்பட உள்ள புதிய மெட்ரோ ரூட் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி கோடம்பாக்கத்தில் உள்ள பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 16 கி.மீ., லைன் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகள் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரி முதல் கோடம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.
இந்த பாதையில் உள்ள 18 நிலையங்களில் 13 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கான்கோர்ஸ் மற்றும் டிக்கெட் கவுண்டர் அமைப்பதில் பணியாளர்கள் மும்முரமாக உள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26 கிமீ மெட்ரோவின் ஒரு பகுதியாக இந்த 16 கிமீ மெட்ரோ ரூட் உள்ளது. 116.1 கிமீ தூரத்திற்கு வர இருக்கும் கட்டம்-2 திட்டம் இரண்டு கட்டங்களாக 2025 மற்றும் 2028 க்கு இடையில் கட்டங்களில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. பவர் ஹவுஸ், வடபழனி, சாலி கிராமம், அவிச்சி பள்ளி, ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம், போரூர், சென்னை பைபாஸ், ராமச்சந்திரா ஹாஸ்பிடல், ஐய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான் சாவடி, முல்லைத்தோட்டம், பூந்தமல்லி பஸ் டெர்மினல், பூந்தமல்லி பைபாஸ் வரை இந்த ரூட் அமைக்கப்பட உள்ளது.
பணிகள் தொடங்கியது: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியை மூடுவதற்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே பெருங்குடி, தொரைப்பாக்கம், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை மற்றும் ECR- OMR இணைப்புச் சாலை ஆகிய இடங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட் 2021 இல் மூடப்பட்டன. தற்போது நாவலூர் பிளாசா மூடப்படுகிறது. இதனால் தினமும் 7 லட்சம் வரை இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications