2 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி.. சென்னை வண்ணாரப்பேட்டையில் சோகம்
சென்னை: 2-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலியான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என் என் கார்டன் பகுதியைச் சேர்ந்த சையது அபுதாகீர். இவர் மனைவி மும்தாஜ். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

சையது அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் ஒன்றரை வயதான இர்பான் வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியில் விளையாடி கொண்டு இருந்தான்.
அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இர்பான் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தான்.
உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இர்பான் உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications