90 மணி நேர வேலைனு சொன்ன எல்&டி சுப்பிரமணியனா சொல்றது! மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு
சென்னை: பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கவிருப்பதாக எல் அன்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் புழுவாய் துடித்து போகிறார்கள். மன அழுத்தம், அடி வயிற்று வலி, தொடைகளில் குடைச்சல், இடுப்பில் ஒரு வித அதீத வலி, வாந்தி வருவது போன்று உணர்வு, உடல் வலி என வந்து 4 நாட்களுக்கு பாடுபடுத்தி விடுகிறது.

இந்த 4 நாட்களில் பெரும்பாலானோருக்கு உடல் உபாதைகள் இருக்கும். சிலருக்கு முதல் நாள் அல்லது இரண்டாவது நாள் மட்டும் வலி இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் சற்று ஓய்வெடுத்து ஓய்வெடுத்து தங்கள் வலியை சரிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை இருந்துக் கொண்டே இருக்கும் என்பது வேறு விஷயம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் இந்த வலி வேதனையுடனேயே செல்ல வேண்டி இருக்கிறது. இதற்காகத்தான் பெண்கள் நலம் போற்றும் வகையில் மாதத்தில் ஒரு நாள் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதை பல்வேறு நிறுவனங்கள் கையில் எடுத்து வருகிறார்கள்.
லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எஸ்.என்.சுப்பிரமணியன். இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளார்.
அதாவது இதற்கான அறிவிப்பை நாளை பெண்கள் தினத்தையொட்டி அவர் வழங்கவுள்ளார். இதன் மூலம் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான பிரிவின் கீழ் பணிபுரியும் 5 ஆயிரம் பெண்கள் பயன்பெறுவார்கள்.
இந்த ஒரு நாள் மாதவிடாய் விடுப்பானது தாய் நிறுவனமான எல் அன்ட் டியின் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். நிதி சேவைகள் அல்லது தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள அதன் துணை நிறுவனங்களுக்கு அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 60 ஆயிரம் ஊழியர்களில் 5 ஆயிரம் பெண் ஊழியர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வளவு நேரம்தான் மனைவியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்" என எல் அன்ட் டி நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் அண்மையில் கேட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் பீகார், ஒடிஸா, சிக்கிம், கேரளா ஆகிய 4 மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளன. ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்களும் மாதவிடாய் விடுப்பு அறிவித்திருந்தன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications