மஞ்சு வாரியரிடம் அத்துமீறிய நபர்.. கையை எங்கே வைக்கிறார் பாருங்க.. கூட்ட நெரிசலில் பரபரப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரசிகர் ஒருவர் அத்து மீறி நடந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
கேரளாவை சேர்ந்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக ஜொலித்த வருபவர். இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து அசத்தி உள்ளார்.

நடிகர் தனுஷூடன் அசுரன், நடிகர் அஜித் குமாருடன் துணிவு, நடிகர் ரஜினிகாந்துடன் வேட்டையன், நடிகர் விஜய் சேதுபதியுடன் விடுதலை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஆர்யா, கௌதம் கார்த்திக் நடிப்பில் தயாராகி வரும் ‛மிஸ்டர் எக்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடிகை மஞ்சு வாரியரிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த வீடியோவில் நடிகை மஞ்சு வாரியரை பார்க்க ஏராளமானவர்கள் திரண்டு நிற்கின்றனர். ரசிகர்களை தாண்டி மஞ்சு வாரியர் தனது காரின் முன் இருக்கையில் ஏறி நிற்கிறார்.
அப்போது ரசிகர்களை நோக்கி அவர் கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்த வேளையில் ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்பை தொடுகிறார். உடனே சுதாரித்த மஞ்சு வாரியர் சட்டென திரும்பினார். ஆனால் அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. சிரித்தபடி நிலைமையை சந்தித்தார். அதன்பிறகு ஒருவர் அவருடன் செல்பி கேட்ட மஞ்சுவாரியர் போஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு செல்கிறார்.
மஞ்சு வாரியரின் இடுப்பை தொடும் நபரின் முகம் வீடியோவில் தெரியவில்லை. அதோடு அவர் தவறுதலாக இதனை செய்தாரா? வேண்டுமென்றே அத்துமீறி நடந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. அதேபோல் மஞ்சு வாரியரும் அந்த சம்பவத்தை பெரிதுப்படுத்தவில்லை. தற்போது வீடியோ பரவி வரும் நிலையில் அதுபற்றிய சர்ச்சை என்பது வந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அந்த சம்பவம் என்பது சமீபத்தில் மஞ்சு வாரியர் கடை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடந்தது என்பது தெரியவந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications