தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி.. 110 விதியின் கீழ் முதல்வர்: அன்றே கூறிய ஒன்இந்தியா தமிழ்
சென்னை: தமிழக அரசு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்காமல், சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் அதை அறிவிப்பார் என்று நாம் முன்பு கூறியிருந்தோம். அதன்படி முதல்வர் அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது தமிழகம் முழுவதுமுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என்று முதல்வர் விதி எண் 110ன் கீழ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் 35 லட்சம் ஏழைக் குடும்பங்கள் மற்றும் நகர்ப் புறங்களில் வாழும் 25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் என மொத்தம் 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி இன்று சட்ட சபையில் விதி எண் 110 ன் கீழ் அறிவித்துள்ளார்.
இப்படி விதி எண் 110 ன் கீழ் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வரும் என ஒன்இந்தியாதமிழ் ஏற்கனவே கூறியிருந்தது. தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கோ மீனவர்களுக்கோ அல்லது அரசு ஊழியர்களுக்கோ எந்தவித அசரடிக்கும் அறிவிப்புகளும் இல்லாமல் இருந்தது. மத்திய பட்ஜெட்டை பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று எதிர்கட்சிகள் வர்ணித்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் இப்படி கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது மக்களை ஏமாற்றம் அடையச் செய்தது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வித்ததிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. மாறாக முதல்வரே இவற்றை சட்டசபையில் அறிவிப்பார் என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படியே பட்ஜெட் அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளான அதாவது பட்ஜெட் அறிவிக்கப்பட்ட சட்டசபைக்கு அடுத்த வேலை நாளான இன்று முதல்வர் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன் பெறவுள்ளன. இதனையடுத்து இன்னும் சில அறிவிப்புகளும் விதி எண் 110 ன் கீழ் வெளிவரவுள்ளன என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆக, அடிக்கடி அம்மா வழியில் நடக்கிறோம் என்று கூறும் அதிமுகவினர் எதில் நடக்கிறார்களோ இல்லையோ விதி எண் 110ல் அறிவிப்புகளை வெளியிடுவதில் நிச்சயம் ஜெயலலிதாவைத்தான் பின்பற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது மறுக்க முடியாத உண்மை. பட்ஜெட்டில் வந்தாலும் சரி விதி எண் 110 ல் வந்தாலும் சரி மக்கள் மகிழ்ந்தால் சரிதான்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications