மிஸ்ஸான ‘ஜிம்’ முருகன்..சென்னையை கதிகலங்க வைத்த வங்கி கொள்ளை! துப்புக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு!
சென்னை : சென்னையில் தனியார் வங்கியில் பணியாற்றும் ஊழியரே அந்த வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையரை பிடித்து தந்தால் ருபாய் 1 லட்சம் பரிசு எனவும், கொள்ளையர்கள் பிடிக்கும் காவலர்களுக்கும் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் வழங்கும் பெட் பேங்க் கோல்ட் லோன் நிறுவனத்தின் கிளை உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த வங்கிக்குள் நுழைந்த மர்மநபர்கள் ஊழியர்களை கட்டிப்போட்டு தாக்கிவிட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கிக் கொள்ளை
விசாரணையில் அதே வங்கியிலில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் தனது கூட்டாளிகள் இருவருடன் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து காவலாளியை கட்டிப்போட்டுவிட்டு, மேனேஜருக்கு மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த 20 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்து மூன்று பைகளில் நிரப்பி கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

போலீசார் தீவிரம்
வங்கியின் மேலாளர் சுரேஷ் அளித்த தகவலின் பேரில் அரும்பாக்கத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளிலும், சென்னை மாநகரம் முழுவதிலும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பிச் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒன்றின் பதிவு எண் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. டிஎன் 10 ஏபி 9460 என்ற வாகனத்தின் பதிவு எண்ணை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி வைத்து தேடுதல் வேட்டை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

தீவிர தேடுதல் வேட்டை
கொள்ளையனான வங்கியின் மார்க்கெட்டிங் மேனேஜர் முருகனுடைய புகைப்படமும் வெளியிடப்பட்டு அதுவும் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் துப்பாக்கியுடன் வரும் கொள்ளையர்களை பிடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு லட்ச ரூபாய் சன்மானம்
இந்நிலையில் சென்னை வங்கி கொள்ளையில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்களைப் பிடிக்கும் காவலர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும், வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் பரிசு என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இதனிடையே தலைமறைவான கொள்ளையர் முருகனுக்கு தொடர்புடைய 10 பேரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை விசாரணை நடத்தியதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications