நாடு முழுக்க ஒரே வோட்டர் ஐடி! ஒரே நாடு ஒரே தேர்தல்! மாநில அரசிடம் கேட்க வேண்டியதில்லை-ஷாக் பரிந்துரை
சென்னை: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அரசமைப்பில் திருத்தங்கள் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழு 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ராஷ்டிரபதி பவனில் சமர்ப்பித்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதிக் கமிஷன் தலைவர் என்.கே. சிங், லோக்சபா முன்னாள் பொதுச் செயலர் சுபாஷ் சி. காஷ்யப் உள்ளிட்ட குழு உறுப்பினர்களும் ராஷ்டிரபதி பவனில் இருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார். இந்த குழு கடந்த சில மாதங்களாக பின் வரும் ஆய்வுகளை மேற்கொண்டது.
பல மாநில தேர்தல்களோடு சேர்த்து ஒரே நேரத்தில் லோக்சபா தேர்தலை நடத்தலாம். இதற்காக லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம். பின்வரும் மாநிலங்களில் சட்டசபை முடிவிற்கு வரும் தேதிகள் பின்வருமாறு: . ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம்: ஜூன் 2024 4. ஹரியானா, மகாராஷ்டிரா: நவம்பர் 2024 5. ஜார்கண்ட்: டிசம்பர் 2024 6. : பிப்ரவரி 2025 7. பீகார்: நவம்பர் 2025 8. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்: மே 2026 9. புதுச்சேரி: ஜூன் 2026 10.கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்: மார்ச் 2027 11.உத்திரப் பிரதேசம்: மே 2027 12. குஜராத், இமாச்சல பிரதேசம்: டிசம்பர் 2027 13. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா: மார்ச் 2028 14. கர்நாடகா: மே 2028
இதனால் இந்த தேர்தல்களை சேர்த்து நடத்தலாமா என்ற ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த குழு இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அரசமைப்பில் திருத்தங்கள் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் நாடு முழுக்க ஒரே ஒரே வாக்காளர் அடையாள அட்டையை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தாக மீதம் உள்ள காலத்திற்கு மட்டும், இடைக்கால தேர்தல் நடத்த குழு பரிந்துரை செய்துள்ளது. தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சி கவிழ்ந்தாலும் மீதம் உள்ள காலத்திற்கு மட்டும், இடைக்கால தேர்தல் நடத்த குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் 2029ல் லோக்சபா தேர்தலை மாநில தேர்தல்களோடு ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நடத்த பரிந்துரை செய்துள்ளனர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் 2029 முதல் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் .
2026, 2027 மற்றும் 2028ல் சட்டசபை தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2029 வரை மட்டுமே இருக்கும். அதாவது 2026ல் தமிழ்நாட்டில் முதல்வராகும் நபருக்கு 3 ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம்.
2029 முதல், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்கள் ஒன்றாக நடத்தபடும். இதனால் . 2026ல் தமிழ்நாட்டில் முதல்வராகும் நபரின் ஆட்சி 2029லேயே முடிவிற்கு வரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications