1% ரிசர்வேஷன்.. 3-ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. சென்னை ஹைகோர்ட் முக்கிய அறிவிப்பு
3ம் பாலினத்தவர் பணியிடங்கள் குறித்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பணியிடங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று தலைமைப் பதிவாளர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கவில்லை எனக் கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ் பானு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மோசடிகளின் கூடாரம்... நீட் தேர்வை ரத்து செய்யனும்.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!.

ஹைகோர்ட்
இவர் 'திருநர் உரிமை கூட்டியக்கம்' சார்பில் பல சட்டப் போராட்டங்களை நடத்தி மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பெற்று கொடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கிரேஸ் பானு, "மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் தேர்வில் ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்..

ஒரு சதவீதம்
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2019ம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவிலை.. எனவே, தமிழகத்தில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில், ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

விசாரணை
சமீபகாலமாகத்தான், 3ம் பாலினத்தவர்கள் போராடி கல்வி பெற்று ஓரளவு நல்ல நிலைமைக்கு முன்னேறி வர ஆரம்பித்துள்ளனர்.. ஒருவேளை இந்த இட ஒதுக்கீடு அவர்களுக்கு கிடைக்கும்பட்சத்தில் அது பேருதவியாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.. கிரேஸ் பானு தாக்கல் செய்த இந்த மனுவானது, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விண்ணப்பங்கள்
சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இப்பணியிடங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதாகவும், ஆனால் மூன்றாம் பாலினத்தவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு கோர இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது என உத்தரவிட்டனர்..
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications