பஸ், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே இ-டிக்கெட் முறை.. சென்னையில் விரைவில் நடைமுறை! செம!
சென்னை: பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே இ டிக்கெட் வசதி சென்னையில் விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் பொது போக்குவரத்து முக்கிய பங்கை வகிக்கிறது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் நாம் செல்லும் இடங்களுக்கு செல்லலாம். சாலையில் வாகன பயன்பாட்டை குறைத்து போக்குவரத்தை நெருக்கடியையும் குறைத்து பேருந்தில் பயணிப்போர் ஏராளமானோர் உள்ளனர்.
அது மட்டுமல்லாமல் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய இடத்தில் உடல் அசதியை ஏற்படுத்தாது என்பதாலும் இது போன்ற பொது போக்குவரத்தை மக்கள் விரும்புகிறார்கள். அது போல்தான் மெட்ரோ ரயில், மின்சார ரயில் உள்ளிட்டவைகளிலும் பயணிக்கிறார்கள்.

மின்சார ரயில்
மின்சார ரயிலில் கட்டணம் குறைவு, மெட்ரோ ரயிலில் கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் ஏசி உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. இவ்வாறு மேற்கண்ட மூன்று பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் போதும் தனித்தனியே பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் நேர விரயமும் அலைச்சலும் பயணத்தில் சிரமமும் ஏற்படுகிறது.

ஒருங்கிணைந்த போக்குவரத்து
இதை தவிர்க்க ஒருங்கிணைந்த போக்குவரத்தை தமிழக அரசு ஏற்படுத்தவுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரே ஒரு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி அனைத்து பொது போக்குவரத்திலும் பயணிக்கலாம். இந்தியாவில் கூட டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் ஒரே ஒரு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் வசதி உள்ளது.

செல்போன் செயலி
இந்தியாவில் முதல் முறையாக செல்போன் செயலி மூலம் இ டிக்கெட் பெற்று பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் எல்லாம் இறுதி கட்டத்தில் உள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள்
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில் மெட்ரோவுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் முடியும் பட்சத்தில் வரும் டிசம்பர் மாதம் முதல் ஒரே மின்னணு பயணச்சீட்டின் கீழ் மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்கலாம். இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிகிறது. இவ்வாறு பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விஷயங்களை எல்லாம் திட்டம் அமலாகும் போது தெரியவரும் என்றனர.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications