ஆதார்+வாக்காளர் அட்டை.. மீதமிருக்கும் பாதி கிணறு! மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்கியது மத்திய அரசு
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
சென்னை: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை தகவல்களை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை தனிநபரின் அடையாளத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த காலத்தில் இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு என்று வந்ததுதான் ஆதார். முதலில் இது கட்டாயமில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஆதார் அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆதர் எண்ணுடன்-பான்-வாக்காளர் அட்டை போன்றவை இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று யோசனையை மத்திய அரசு முன்மொழிந்தபோது, அதனை காங்கிரஸ் கடுமைாயாக எதிர்த்தது. இதனையடுத்துதான் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது முக்கியமானதாகும். இதனையடுத்து இப்பணிகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.

எதிர்ப்பு
பல இடங்களில் இப்பணிகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இவ்வாறு எதிர்ப்பு கிளம்பிய பகுதிகளில் விளக்க கூட்டம் போட்டு பின்னர் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. மக்களின் எதிர்ப்பு சில இடங்களில் எழுந்த நிலையில், இந்த இணைப்பு கட்டாயமில்லை என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியிருந்தார். ஆனால் தற்போது இது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி தொடங்கிய இந்த பணியானது 2023ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

கட்டாயம்
ஆனால், இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்மாலான மக்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே இதற்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் அனைவரும் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் எனும் செல்போன் ஆப் மூலமாகவும் இவ்வாறு இணைத்துக்கொள்ளலாம்.

பான் எண்ணும் கூட
இது தவிர வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி சிலை அலுவலர் ஆகியோரிடம் தங்களது ஆதார் எண்ணை கொடுத்து ஆதார் கார்டு-வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக்கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆதார்-பான் அட்டையை இணைக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே கெடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதிதான் கடைசி தேதி. எனவே பான் எண்ணை ஆதார் என்னுடன் விரைவில் இணைக்க வேண்டும்.

வலியுறுத்தல்
இதை தவறவிட்டால் 10 இலக்க பான் எண் செயலிழந்துவிடும். இதனால் பான் அட்டை கொண்டு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் தடை செய்யப்படும். அதேபோல வரமான வரி ரிட்டனையும் தாக்கல் செய்ய முடியாது. மேலும் அபராமாக ரூ.1,000 வசூலிக்கப்படும். ஆனால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மேலும் 6 மாதங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications