Exclusive: கோவிலை பராமரிக்கும் குழுவில் முஸ்லீம்களை ஏற்பார்களா? வக்பு சட்டம்- காதர் மொய்தீன் கேள்வி
சென்னை: இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் இது தொடர்பாக ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் இந்து கோயில்களை நிர்வகிக்கும் குழுவில் முஸ்லீம் இருப்பதை பாஜக ஏற்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் கிரண் ரிஜூஜு வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை இன்று தாக்கல் செய்தார். அதில் வக்பு சட்டத்தில் 40 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இருப்பினும், அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் இது தொடர்பாக ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
காதர் மொய்தீன்: அதில் அவர், "மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தினாலும் பாஜக கொள்கைகளையே கொண்டு வர பார்க்கிறார்கள். வக்பு சட்டங்களை இல்லாமல் ஆக்க எடுக்கப்படும் மறைமுக முயற்சி தான் இது.
கோயில்களை பராமரிக்க தனியாக கமிட்டி இருக்கிறது. அந்த கமிட்டியில் முஸ்லாமியர்கள் இருக்க வேண்டும் என்றால் ஏற்க முடியுமா.. கோயில்களை பராமரிக்க தனியாக முறை இருக்கிறது.. பாரம்பரியம் இருக்கிறது. அதை தெரிந்தவர்கள் தான் அந்த கமிட்டியில் இருக்க முடியும். அதேபோல தான் பள்ளிவாசல்கள்.. முஸ்லீம் நடைமுறை தெரிந்தவர்கள் தானே அதை நிர்வகிக்க முடியும். இதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
குழப்பத்தை ஏற்படுத்தும்: இந்து சமூகத்தினரே இதை ஏற்க மாட்டார்கள். அங்கு சென்று நாங்கள் என்ன பேசுவது என்றே கேட்பார்கள். இந்த கமிட்டில் எல்லாம் இருக்கலாம் என சொல்வது குழப்பத்தையே ஏற்படுத்தும்.
வக்பு சொத்துகள் மற்றும் சட்டங்களை இல்லாமல் ஆக்கவே இதை செய்கிறார்கள். இதனால் தான் வக்பு என்ற வார்த்தையை கூட நீக்கி ஏதேதோ சொல்கிறார்கள். இதை முஸ்லீம்கள் அனைவரும் எதிர்ப்பார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்பார்க்கள்.
தேவையில்லாதது: தேவையில்லாத சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. மக்களை குழப்பி அமைதியை கெடுக்கும் முயற்சியாகவே இதை பார்க்கிறோம். இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போவோம். நாடு தழுவிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications