தமிழக அரசின் தூய்மை மிஷன்.. திட்டத்துடன் கைகோர்த்த "ஒன்இந்தியா".. மாசற்ற எதிர்காலத்திற்கான முயற்சி!
சென்னை: இந்தியாவின் முன்னணி பன்மொழி டிஜிட்டல் செய்தி மற்றும் ஊடக தளமான "ஒன்இந்தியா", தமிழ்நாடு அரசின் தூய்மை மிஷனுடன் ஒரு புதிய கூட்டணியை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை தூய்மை, நிலைத்தன்மை (sustainability) மற்றும் கழிவு மேலாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றுவதே இந்த அரசு திட்டத்தின் முக்கிய நோக்கம்.
"ஒன்இந்தியாவின்"அதிகப்படியான டிஜிட்டல் பார்வையாளர்களுடன், அரசின் வலுவான சுற்றுச்சூழல் இலக்குகள் இணைந்து, ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுவந்து, கழிவில்லா வாழ்க்கை முறையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஒன்இந்தியா", டெய்லிஹண்ட், ஃபில்மிபீட் மற்றும் ஜோஷ் போன்ற தளங்கள் மூலம் தினசரி லட்சக்கணக்கான பயனர்களை சென்றடைகிறது. இந்த அதிகப்படியான பார்வையாளர்கள், வாசகர்கள் மூலம், ஒரு தூய்மையான, கழிவில்லா தமிழ்நாட்டிற்கான தூய்மை மிஷனின் செய்தியை "ஒன்இந்தியா" மக்கள் இடையே பரப்பும்.

இது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என்பதை தாண்டி, வணிகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசுத் துறைகளையும் இத்திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கும். இந்தக் கூட்டணி, பிராண்டுகள் சார்ந்த பிரச்சாரங்களை நடத்தி, நிறுவனங்களுடன் இணைந்து, கழிவுகளைப் பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், மற்றும் மாசு ஏற்படுத்தாத நிலையான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்தல் போன்ற பழக்கங்களை மேம்படுத்தும் உள்ளடக்கத்தை உருவாக்கும்.
மேலும், இந்த ஒத்துழைப்பு பிராண்டுகள் தங்கள் முக்கிய அடையாளத்தில் தூய்மையை, நிலைத்தன்மையை (sustainability) இணைக்க ஊக்குவிப்பதோடு, நுகர்வோரையும் கழிவில்லா எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் இணையத் தூண்டும்.
கழிவு மேலாண்மை திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் நிலைத்தன்மை (sustainability) திட்டங்களில் அரசுடன் இணைந்து பணியாற்ற பிராண்டுகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இது நிறுவனங்களின் CSR பணிகளை வலுப்படுத்துவதோடு, மக்களுடன் இணையும் அர்த்தமுள்ள பிராண்ட் கதைகளை உருவாக்கவும் உதவும்.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தூய்மை மிஷன் தொடங்கப்பட்டது. அன்று முதல், இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. "இது குப்பை மேட்டர் இல்லை!" மற்றும் "கொட்டுனா வலிக்குமா" என்ற இரண்டு டிஜிட்டல் படங்கள், நடிகர்-நகைச்சுவையாளர் யோகி பாபுவைக் கொண்டு, கழிவுகளைப் பிரிப்பது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை ஊக்குவிக்க வெளியிடப்பட்டன.
இந்த படங்கள் "ஒன்இந்தியாவின்" டிஜிட்டல் தளங்களில் பரவலாகக் காட்டப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்தன.
அடுத்த கட்டமாக, இந்தக் கூட்டணி, அதிக மக்களைச் சென்றடையும் பாட்காஸ்ட்கள், ஊடாடும் பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் பயனர் உருவாக்கிய உள்ளடக்க (UGC) பிரச்சாரம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும். மக்கள் தங்கள் நிலைத்தன்மை (sustainability) கதைகளைப் பகிரலாம், கழிவு மேலாண்மை சவால்களில் பங்கேற்கலாம், மற்றும் ஒரு தூய்மையான தமிழ்நாட்டிற்கான டிஜிட்டல் குரல்களாக மாறலாம்.
ஒன்இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி (CEO) திரு. ராவணன்.N கூறுகையில், "தூய்மை மிஷனின் கீழ் தமிழ்நாடு அரசுடன் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். இது தூய்மைக்கான, மாற்றத்திற்கான ஒன்இந்தியாவின் நிலைப்பாட்டை காட்டுகிறது. தமிழ்நாட்டின் நம்பர் 1 டிஜிட்டல் ஊடக தளமான "ஒன்இந்தியா" வலுவான தகவல்தொடர்பு மக்களை ஊக்குவிக்க முடியும். எங்களின் இந்த கூட்டு முயற்சி அனைவரையும் ஒன்றிணைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மாநிலத்தில் தூய்மையை, நிலைத்தன்மையை (sustainability) அடிப்படை வாழ்க்கை முறையாக மாற்ற உதவுவதே எங்கள் நோக்கம்." என்றார்.
தமிழ்நாடு அரசு, தூய்மை மிஷனின் CTCL CEO கங்கா திலீப் கூறுகையில், "இந்தக் கூட்டணி முக்கியமானது, ஏனெனில் இது தூய்மை மற்றும் நிலைத்தன்மையை (sustainability) பற்றிய எங்கள் செய்தியை ஒவ்வொரு நபரிடமும் கொண்டு செல்ல உதவுகிறது. களத்தில் உள்ள வலுவான நடவடிக்கைகளை "ஒன்இந்தியாவின்" டிஜிட்டல் அணுகலுடன் இணைப்பதன் மூலம், விழிப்புணர்வை உண்மையான நடத்தை மாற்றமாக மாற்ற முடியும்."
"கழிவுகளைப் பிரித்தல் மற்றும் பொறுப்பான முறையில் அகற்றுதல் ஆகியவை ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் எளிய, அன்றாட பழக்கவழக்கங்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த முயற்சியை மேலும் ஈடுபாட்டுடன் செய்ய, கல்லூரி மாணவர்கள் #KVTMCTCL என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கழிவு மேலாண்மை குறித்த 30 வினாடி ரீல்களைப் பகிரக்கூடிய ஒரு சமூக ஊடகப் போட்டியைத் தொடங்கியுள்ளோம். சிறந்த வீடியோக்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இந்த கூட்டாண்மை தகவல், பங்கேற்பு மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குகிறது - இது ஒரு தூய்மையான தமிழ்நாட்டிற்காக அரசும் ஊடகங்களும் இணைந்து செயல்படுவதற்கு ஒரு உண்மையான எடுத்துக்காட்டு." என்றார்.
"ஒன்இந்தியா" பற்றி: "ஒன்இந்தியா" இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஊடக, கன்டென்ட் தளங்களில் ஒன்றாகும். பன்மொழி மற்றும் மொபைல்-முதல் பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தளமாகும் இது. இந்த தளம் 1999 இல் தொடங்கப்பட்டது. 2006 இல் பல பிரிவுகளாக விரிவடைந்து மிகப்பெரிய ஊடகமாக உருவெடுத்தது. இன்று, "ஒன்இந்தியா" உலகின் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 ஊடக, கன்டென்ட் வலைத்தளங்களில் ஒன்றாகும். "ஒன்இந்தியா" நெட்வொர்க்கில் ஃபில்மிபீட் (பொழுதுபோக்கு), டிரைவ்ஸ்பார்க் (வாகனம்), குட்ரிட்டர்ன்ஸ் (நிதி), மைக்கேல் (விளையாட்டு), கிஸ்பாட் (தொழில்நுட்பம்), போல்ட்ஸ்கை (வாழ்க்கை முறை), நேட்டிவ் பிளானட் (பயணம்), கரியர்இந்தியா (கல்வி), ஸ்பார்க் ஒரிஜினல்ஸ் (AI வீடியோ ஸ்டுடியோ), மற்றும் ஒன்அரேபியா (MENA செய்திகள்) ஆகியவை அடங்கும். இந்த குழு 10 க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் கட்டுரைகள், வீடியோக்கள் மற்றும் குறுகிய வடிவ கண்டெண்ட்களை வழங்குகிறது.
வலைத்தளம்: https://www.oneindia.com/
லிங்க்ட்இன்: https://www.linkedin.com/company/onedotin/
ஒன்இந்தியா அல்லது தூய்மை மிஷன் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
நியூக்ளியஸ் PR
குஷ்பூ அலக் | [email protected] | 7709605805












Click it and Unblock the Notifications