Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராம நத்தம் நிலம் வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. உட்பிரிவு மனை இருக்கா? கட்டிட அனுமதியில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அங்கீகாரம் உள்ள மனைகள் மட்டும் தான், கட்டிட அனுமதி பெற முடியுமா? இதுகுறித்து புதிதாக தற்போது விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது. அது என்ன?

தமிழகத்தில், 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

Registration Department

கிராமப்புறம்: இதன்மூலம், கட்டட திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கின்றவர்களில் கிராமப்புறங்களில் 72 சதவீதம் பொதுமக்களும், பேரூராட்சி பகுதிகளில் 77 சதவீதம் பொதுமக்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 79 சதவீதம் பொதுமக்களும் இந்த திட்டத்தின் மூலம் உடனடியாக பயன்பெறுவார்கள்.

இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை தவிர்த்து வேறு எந்த விதமான வீண் விரயங்களும் ஏற்படாது. உரிய கால நேரத்துடன் எல்லோரும் எளிய முறையில் அனுமதி பெற முடியும்.. சொந்த வீட்டுக்கனவுகள் நினைவாகும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் பெற்று தங்களின் கனவு இல்லங்களை கட்டுவதற்கு பெரும் வாய்ப்பாக அமையும்!

கட்டிடம்: பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் கட்டட திட்ட அனுமதி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுவதால், இதன் மூலம் அனுமதியற்ற கட்டிடங்கள் உருவாகாத நிலை வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி சொல்லும்போது, "வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது. 2,500 சதுர அடி நிலம் வைத்திருக்கும் ஒருவர், 3500 சதுர அடி அல்லது 3500 சதுர அடிக்கு கீழே கட்டுகிறபோது அவர்கள் சுயசான்றிதழ் தந்து, இதற்கான அனுமதியை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

விதிமுறைகள்: இதற்கான அலைச்சல் குறையும்.. விதிமுறைகளுக்கு உட்பட்டு சட்டத்துக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.. 2500 சதுர அடியில், 3500 அடிக்கு கீழே கட்டிடம் கட்டுகிற அனைருக்குமே இந்த திட்டம் பொருந்தும்" என்றார்.

அந்தவகையில், இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.. இதற்காக உரிமையாளர் பெயரில் முறையான பட்டா, வீட்டு மனையாக அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் ஆகிய ஆவணங்களும் கேட்கப்படுகின்றன. எனினும், அங்கீகாரம் உள்ள மனைகள் மட்டும் தான், கட்டட அனுமதி பெற முடியுமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

புதிய உத்தரவு: இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் உள்ளதாவது:

"சுயசான்று அடிப்படையில் உடனடி கட்டிட அனுமதி வழங்குவதற்காக, பொது கட்டட விதியில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கட்டடத்தின் அளவுகள் தொடர்பான அடிப்படை விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 2017ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், வரன்முறை செய்யப்பட்ட மனைகளுக்கு உடனடி கட்டிட அனுமதி வழங்கப்படும். இதேபோன்று, முறையான அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட உட்பிரிவு மனைகள், நத்தம் மனைகளுக்கும் உடனடி அனுமதி கிடைக்கும்.

மனைகள்: இந்த மனைகள் அனைத்தும், 2016 அக்டோபர் 20க்கு முன் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கடலோர ஒழுங்குமுறை மண்டலம், மலைப் பகுதி பாதுகாப்பு குழுமம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தடை செய்யப்பட்ட இடங்களில் வீடு கட்ட, இத்திட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படாது" என்று விளக்கம் தந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+