ஆன்லைனில்.. வாரிசு சான்றிதழ் ஸ்டேட்டஸ்.. தாலுகா ஆபீசில் சான்றிதழை பெறுவது எப்படி.. ரொம்ப சிம்பிள்
சென்னை: வாரிசு சான்றிதழை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றாலும், அந்த சான்றிதழை எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் தெரியுமா? ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களை அல்லது பணத்தை பெறுவதற்கு பெறப்படும் சான்றிதழ்தான் வாரிசு சான்றிதழ். இது வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது.
இப்படி வாரிசு சான்றிதழ்கள் இருந்தால், எந்த பிரச்சனையும் சொத்து தொடர்பாக வராது.. வாரிசுகள் அந்த சொத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.. வாரிசுகளுக்குள் தகராறு வரவும் வாய்ப்பிருக்காது....

ஆவணங்கள்: ஆனால், இந்த வாரிசு சான்றிதழை எல்லாராலும் பெற்றுக்கொள்ள முடியாது.. இறந்த நபரின் கணவன் அல்லது மனைவி, இறந்த நபரின் வாரிசுகள், இறந்த நபரின் பெற்றோர் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்..
இந்த சான்றிதழ் இருந்தால்தான், ஓய்வூதியம் பெற முடியும், PF, கிராஜுவிட்டி பெற முடியும்.. கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற முடியும்.. அதுமட்டுமல்ல, நேரடியாக இவருக்குதான், தாம் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும்கூட, சொத்துக்கள், உரிமைகள் விஷயத்திற்கு இந்த சான்றிதழ் மிகவும் முக்கியமானதாக உள்ளது..
இணையதளம்: இந்த வாரிசு சான்றிதழை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பகுதியின் நகராட்சி அலுவலகம்/தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.. இப்போது, ஆன்லைனிலேயே விண்ணப்பித்து சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு, www.tnesevai.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று, ரிஜிஸ்தர் செய்து கொண்டு, அதற்கு பிறகு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
நேரடியாக வாரிசு சான்றிதழ் பெற என்ன வழிமுறைகளை கையாள வேண்டும் தெரியுமா?
- விண்ணப்பதாரர் அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.. விண்ணப்பப் படிவத்தை தாலுகா அலுவலகத்தில் பெறலாம் அல்லது டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- படிவத்தில் அனைத்து விவரங்களையும் பதிவிட்டபிறகு, வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்..
- 2 நாட்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்/ வருவாய் ஆய்வாளர் ஆகியோரை சந்திக்க 2 டோக்கன்கள் தரப்படும்.
- இப்போது, விண்ணப்பதாரர் அந்தந்த படிவங்களில் தகவலை உள்ளிட வேண்டும்.. முதல் படிவத்தில், விண்ணப்பதாரரின் விவரங்களும், 2வது படிவத்தில், சரிபார்ப்பதற்காக விண்ணப்பதாரர் 10 குறிப்புகளையும் குறிப்பிட வேண்டும்.
- இந்த அனைத்து விவரங்களையும் பதிவிட்டபிறகு, விண்ணப்பதாரர் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் கையொப்பத்தையும் பெற வேண்டும்.
- சட்டப்பூர்வ வாரிசுகளை சரிபார்த்த பிறகு, கிராம நிர்வாக அலுவலர் தன்னுடைய கையெழுத்து மற்றும் முத்திரையை பதிவிடுவார்... இதற்கு பிறகு, இந்த விண்ணப்பத்தை வருவாய் ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.. அதன் பிறகு வருவாய் ஆய்வாளர் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு சென்று சரிபார்ப்பார்.
- விண்ணப்பதாரர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் படிவத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து டோக்கன் நம்பரையும் பெற வேண்டும். இந்த டோக்கன் நம்பர் வழங்கப்பட்டவுடன், படிவத்தை சமர்ப்பித்த நாளிலிருந்து, 16 நாட்களுக்குள் வட்டாட்சியர் சான்றிதழை வழங்கிவிடுவார்.
வாரிசு சான்றிதழ் நிலையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி தெரியுமா?
- வாரிசு சான்றிதழ் விண்ணப்ப படிவத்தை நீங்கள் சமர்ப்பித்தபோதே உங்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கப்படும்... அந்த ரசீதை வைத்துதான் இதை அறிய முடியும்.
- இதற்காக முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான e-Sevai வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்
- ஸ்கிரீனில் 'Services Offered' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது, "Legal Heir certificate" என்பதை கிளிக் செய்தால், புதிய வெப்சைட் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்
- இறுதியாக, 'Check Status' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications