Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது.. 19 இடங்களில் தான் தற்போது நீர் தேங்கியுள்ளது: அமைச்சர் நேரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் முழுமையாக முடித்துவிடுவோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட நிலையில், மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேங்கியிருந்த பகுதிகளில் மழைநீர் அகற்றப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நாளைக்குள் மழைநீர் அகற்றும் பணிகள் முழுமையாக முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

Only 19 places in Chennai have not yet removed the water, says minister kn nehru

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "சென்னையில் 19 இடங்களில் மட்டும்தான் தற்போது நீர் அகற்றப்படாமல் இருக்கிறது. தண்ணீர் அகற்றும் பணியை நாளை மாலைக்குள் முழுமையாக முடித்துவிடுவோம் என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இன்றைக்கு கூட கூடுதலாக மோட்டார்கள் கேட்டார்கள். கொடுத்துவிட்டோம்.

இதுவரை 20 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு விட்டது. குப்பைகள் அகற்றும் பணி ஓரிரு நாட்களில் முடிவு பெற்றுவிடும். வீட்டிலிருக்கும் குப்பைகளை மக்கள் தெருவில் வீசுகின்றனர், இதனால் தாமதமாகிறது. எனவே, முழுமையாக சென்னை நகரம் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.

ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களுக்கும் தேவையான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாக்கம் போன்ற இடங்களில் நீர் தொட்டிகளுக்கு நேரடியாக தண்ணீர் கொடுத்திருக்கிறோம். 400க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6 பள்ளிகளில் மட்டுமே வகுப்பறைகள் சுத்தப்படுத்தபடவில்லை. காரணம், ஏரிக்கு அருகில் இருப்பதால் நீர் வந்துகொண்டே இருக்கிறது. அந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறைகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளும் 6-7 நாட்களாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்த 2500 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். திங்கட்கிழமைக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+