24 மணி நேரம்தான் இருக்கு.. மிஸ்ஸானா பல ஆயிரம் அபராதம்! வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு செக்
சென்னை: ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் நாள் தொடங்குகிறது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பாக மார்ச் 31ம் தேதிக்குள் நீங்கள் 2021-22 (FY22) மற்றும் 2022-23 (FY23) நிதியாண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட.. அதாவது அப்டேட் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கை (ITR-U) தாக்கல் செய்ய வேண்டும்.
நாடு முழுக்க 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாம். அவர்களின் வருமான வரி முறைகேடுகள் அல்லது தவறுகள், வருமான வரி தாக்கலில் அவர்கள் செய்த குளறுபடிகள் தொடர்பாக விளக்கம் கேட்டு மெயில் அனுப்பி உள்ளனர்.

இந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
யாருக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்படும்
1. அடிக்கடி வருமான வரி தாக்கலில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2. அடிக்கடி பொய்யான ஆவணங்களை தந்து வருமான வரி தாக்கல் செய்பவர்கள் இந்த
சிக்கலில் மாட்டுவார்கள்.
3. பொய்யான கணக்கு காட்டி விலக்கு பெற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
4. இவர்கள் நோட்டீஸுக்கு விளக்கம் தந்து கூடுதல் வரியை செலுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
5. அவர்கள் செய்த தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலக்கெடு
இந்த நிலையில்தான் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் நாள் தொடங்குகிறது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பாக மார்ச் 31ம் தேதிக்குள் நீங்கள் 2021-22 (FY22) மற்றும் 2022-23 (FY23) நிதியாண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட.. அதாவது அப்டேட் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கை (ITR-U) தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. மார்ச் 31ம் தேதிக்குள்.. அதாவது 24 மணி நேரத்தில் இந்த வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரி முக்கியம்:
அதாவது தவறான வருமான வரி செலுத்தியவர்கள்.. வருமானத்தைப் மறைத்தவர்கள், சரியாக வருமானத்தை காட்டாமல் தவறவிட்ட வரி செலுத்துவோர், அசல் வருமானத்தில் பிழைகள் செய்தவர்கள் அல்லது தங்கள் ITR ஐ முன்பே தாக்கல் செய்யத் தவறியவர்கள் இன்னும் தங்கள் returnஐ சரிசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நிதிச் சட்டம் 2022ன் கீழ் ஒரு மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் வரி செலுத்துவோர் தங்கள் ஐடிஆர்களை சரிசெய்ய நிதி அமைச்சகம் அனுமதித்தது.
அதாவது ஒரு மதிப்பீட்டு ஆண்டில் இருந்து அடுத்த 2 வருடங்களுக்குள் நீங்கள் புதுப்பிக்கப்பட்ட.. அதாவது அப்டேட் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கை (ITR-U) தாக்கல் செய்ய முடியும்.
நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் சிலர் 1 லட்சத்திற்கும் மேல் வருட வாடகை கட்டுவதாக கணக்கு காட்டுகின்றனர். இதற்கு பொய்யான பான் கார்டு விவரங்களை வீட்டு ஓனர் விவரம் என்று பலர் அளிப்பது உண்டு. முக்கியமாக பல சிஏக்கள் ஒரே மாதிரியான பொய்யான பான் கார்டு விவரங்களை பல கிளையண்டுகளுக்கு பயன்படுத்துவது உண்டு.
இப்படிப்பட்ட விவரங்களை வைத்து தவறாக refund பெறக்கூடியவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இவர்களுக்கு கடந்த 2 வாரங்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications