கையில் அதிமுக கொடி டாட்டூ! 2 பேர் தான் இருந்தாங்க! செங்கோட்டையன் எஸ்கேப்..இன்னொருத்தர் யார்? அவரா?
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபோது கட்சி கொடியை தனது கையில் பச்சை குத்தியிருப்பதை பலரும் கவனத்திருப்பார்கள். எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயரை மாற்றிய போது தொண்டர்கள், அதிமுக கொடியை கையில் பச்சை குத்தி கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். அதை ஏற்று பலரும் பச்சை குத்தி கொண்டனர். அவர்களின் இருவர்தான் அதிமுகவில் அமைச்சர்கள் இருந்தனர். ஒருவர் செங்கோட்டையன். அவரை தவிர்த்து ஒரே ஒருவர் மட்டுமே அதிமுக கொடியை கையில் பச்சை குத்தி இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சமாதான பேச்சு வார்த்தைகள் பலனளிக்கவில்லை இதை அடுத்து நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து இருக்கிறார். மேலும் கட்சியில் சேர்வதற்கு முன்னதாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் செங்கோட்டையன்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அப்போது அவரது கையில் அதிமுக கொடி பச்சை குத்தி இருப்பதை பலரும் கவனித்தனர். இதற்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது.

1972ல் திமுகவை விட்டு எம்ஜிஆர் நீக்கப்பட்ட போது அவருக்கு பக்கபலமாக ரசிகர்கள் இருந்தார்கள். அந்த அன்புக்காகவே எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்தார். வாழ்வா? சாவா? காலகட்டத்தில் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு ஏகோபித்த ஆதரவை அவர்களது ரசிகர்கள் தான் வழங்கினார்கள். பலரும் எம்ஜிஆர் பெயரையும் அவரது உருவத்தையும் தங்கள் கைகளிலும் மார்பிலும் பச்சை குத்தி கொண்டனர். 1976 இல் மாநில கட்சியாக இருந்த அதிமுகவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றினார் எம்ஜிஆர்.
அப்போது அதிமுக கொடியை கையில் தொடர்கள் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என கூறினார். அப்போது அதிமுகவில் இருந்த சில மூத்த தலைவர்களான கோவை செழியன், விஐடி விஸ்வநாதன், இந்திரகுமாரி, விருதுநகர் சீனிவாசன் ஆகியோர் பொதுக்குழுவிலேயே எம்ஜிஆரை எதிர்த்து பேசினார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னது தான் சரி என காளிமுத்து, எஸ்டி சோமசுந்தரம், சைதை துரைசாமி போன்ற தீவிர ஆதரவாளர்கள் பேசினார்கள்.

எம்ஜிஆரே சொல்லிவிட்டார் என தமிழக முழுவதும் இருந்த லட்சக்கணக்கான எம்ஜிஆர் தொண்டர்கள் தங்கள் கைகளில் பச்சை குத்தி கொண்டனர். அவர்களில் ஒருவர்தான் செங்கோட்டையன். மேலும், நடிகர் விஜயகுமார் கூட அப்போது அதிமுக கொடியை பச்சை குத்திக் கொண்டார். இந்நிலையில், தற்போதைக்கு அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களின் எம்ஜிஆர் சொன்னபடி கொடியை பச்சை குத்தி கொண்டவர்கள் இருப்பார்கள் என்றால் நமக்கு தெரிந்தவரை அது செங்கோட்டையன் தான். அது மட்டுமல்ல ஏற்கனவே சொன்னது போல இன்னொரு முன்னாள் அமைச்சர் அதிமுக கொடியை இன்னும் தனது கைகளில் தாங்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை திண்டுக்கல் சீனிவாசன் தான். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான அவர், எம்ஜிஆர் சொன்ன உடனே தனது கையில் அதிமுக கொடியை பச்சை குத்தி கொண்டார். ஜெயலலிதா இருந்தபோது பொருளாளராகவும் பலமுறை எம்பியாகவும் இருந்த அவர் ஒரு சில காரணங்களால் அரசியல் வனவாசத்தை அனுபவித்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட்ட அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட போதும் அவர் வேறு கட்சிக்கு செல்ல போகிறார் என சிலர் பேசி வந்தனர். ஆனால் தற்போது வரை அதிமுகவில் தான் இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். அதிமுக கொடியை தாங்கிய செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று விட்ட நிலையில் பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் சந்தித்த போதும் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவிலேயே தொடர்வது குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications