Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதைவிட ஆபரேஷன் பண்ணிக்கிறதே ஈஸி.. நீதிபதிக்கு துஷார் மேத்தா கொடுத்த பதில்.. கோர்ட்டில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கைது செய்யப்பட்ட யாருமே ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம், மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துவிட்டால் போதும் என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தெரிவித்ததற்கு நீதிபதி ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு துஷார் மேத்தா அளித்த பதில் கோர்ட்டையை திரும்பிப் பார்க்க வைத்தது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

Operation is easier than being interrogated: SG Tushar Mehta reply to judge on senthil balaji case

3வது நீதிபதி முன்பாக வாதம்: இதையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தார். இதையடுத்து இன்று அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

அப்போது, அமலாக்கத்துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்ற செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதத்தை நிராகரித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத்துறையின் கடமையை மறுப்பதாகும். ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான் எனச் சுட்டிக்காட்டினார்.

துஷார் மேத்தா பரபர: மேலும், சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது என்பதால் புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது, கைதுக்கு பிறகும், புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும்போது ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும்? அதனால் தான் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதாகவும், காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாட்களை கருத்தில் கொள்ளக் கூடாது எனக் கோர முடியாது என்றார்.

ஆபரேஷனே பரவாயில்லை: மேலும், ஐகோர்ட் அமர்வின் மூத்த நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் கைது செய்யப்பட்ட யாருமே ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம், மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துவிட்டால் போதும் என துஷார் மேத்தா தெரிவித்தார். அதற்கு நீதிபதி சிவி கார்த்திகேயன், அவர்களுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதை கவனத்தில் வையுங்கள் என்றார்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சில நேரங்களில் குற்றத்தில் தமது பங்கு அதிகமாக இருப்பதால், விசாரணைக்கு உள்ளாவதை விட அறுவை சிகிச்சை செய்து கொள்வதே எளிதானதாக இருக்கும் என பதில் அளித்தார். துஷார் மேத்தா நிறைவாக கூறிய இந்த பதிலால் கோர்ட்டே பரபரத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+