சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கும்! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தில் எடப்பாடி பழனிசாமி வைத்த பஞ்ச்!

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    DMK-வுடன் இணைந்து செயல்பட்ட OPS உடன் இணைந்து செயல்பட முடியாது - EPS அறிவிப்பு

    மேலும், நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று கீதையில் கண்ணன் உரைத்ததையும் அவர் தனது வாழ்த்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது;

    மோடியின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கே.. விவேகானந்தரை பின்பற்றுங்க! மாணவர்கள் முன் ஆளுநர் அட்வைஸ் மோடியின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கே.. விவேகானந்தரை பின்பற்றுங்க! மாணவர்கள் முன் ஆளுநர் அட்வைஸ்

    கிருஷ்ண ஜெயந்தி

    கிருஷ்ண ஜெயந்தி

    உயிர்களைக் காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் எனது உளங்கனிந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

     இனிய திருநாளில்

    இனிய திருநாளில்

    கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய திருநாளில் குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து, கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து வரிசையாக பதிய வைத்தும், காண்பவர்களின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே, கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு இல்லத்திற்கும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் கோலமிட்டு, அலங்காரம் செய்து, அப்பம், சீடை, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய் மற்றும் பழ வகைகளைப் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு மகிழ்ச்சியடைவர்.

    நடப்பவை நன்மைக்கே

    நடப்பவை நன்மைக்கே

    நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று கீதையில் கண்ணன் உரைத்த "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" என்ற கண்ணனின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    காலத்திற்கு ஏற்ப

    காலத்திற்கு ஏற்ப

    அதிமுகவில் தற்போது அரங்கேறி வரும் புது புது காட்சிகளுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் வைத்துள்ள பஞ்ச் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Krishna Jayanti greetings: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X