"ஒன்றிணைந்து செயல்படலாம்".. சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க தயார்.. ஓபிஎஸ் பகிரங்க அழைப்பு
சென்னை: சசிகலா, தினகரனும் அதிமுகவில் இணைந்து செயல்பட ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து ஓபிஎஸ் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டதால்தான் அதிமுக உருவானது. அன்று முதல் அவர் இருந்தவரை அவர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
அது போல் அவருக்கு பிறகு பல்வேறு இன்னல்களை தாண்டி ஜெயலலிதா இந்த இயக்கத்தை 30 ஆண்டுகள் கட்டி காத்தார். எதிர்க்கட்சிகளால் பல பிரச்சினைகள் வந்த போதும் அதை எல்லாம் சமாளித்து நல்லாட்சியை தந்தார். மக்களுக்காக பல நல்ல திட்டங்களை தீட்டியிருந்தார்.

ஜனநாயக முறை
ஜனநாயக முறையில் ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்தித்த போது அதிமுகவை வெல்ல எந்த கட்சியும் இல்லை என்ற நிலையை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கித் தந்தனர். அதிமுகவில் எங்களுக்கு சிறு சிறு பிரச்சினைகளால் கருத்து வேற்றுமை ஏற்பட்டிருந்த நேரத்தில்தான் திமுக ஆளும் கட்சியாக வர கூடிய சூழல் இருந்தது. இன்றைக்கும் அந்த சூழல் உள்ளது.

எம்ஜிஆர் ஜெயலலிதா
எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் அவர்களுடைய கட்டளைகளை செயல்படுத்தக் கூடிய வகையில் நாங்கள் எங்கள் அரசியல் பாதையை அமைத்திருந்தோம். தற்போது சில கருத்து வேறுபாடுகளால் அசாதாரண சூழல் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

அசாதாரண சூழல்
இந்த அசாதாரண சூழல்களை எங்கள் மனங்களை அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட்டு மீண்டும் தமிழகத்தில் ஆளும் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்கு உறுதியாக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு. ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்திக்கும் போதெல்லாம் அதிமுகவா திமுகவா என்ற நிலை வரும் போது அதிமுக அதிக அளவு தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது.

மக்கள் விரோத போக்கு
ஆளும் கட்சியின் மக்கள் விரோத போக்கை உரிய எதிர்க்கட்சியாக முதல் அரசியல் கட்சியாக எதிர்க்கும் கட்சியாக அதிமுக இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதா காலமானதற்கு பிறகு அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அவருக்கு நாம் எல்லாம் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். இருவரும் இணைந்து பல்வேறு ஜனநாயக கடமைகளை ஆற்றியிருக்கிறோம். இந்த நிலை மீண்டும் வர வேண்டும்.

தர்மயுத்தம்
ஜெயலலிதா இறந்தபிறகு தர்மயுத்தம் தொடங்கப்பட்டு அதன் பிறகு கழகத்தின் உயர் மட்ட தலைவர்கள், தொண்டர்களுடைய எண்ணப்படி கூட்டு தலைமையாக அதிமுக செயல்படும் என்பதுதான் எங்கள் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டது.

வெற்றிகரம்
ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாகவும் சட்டவிதிகளின்படியும் எங்கள் பணிகளை நாங்கள் ஆற்றினோம். இதில் எந்த குறைபாடும் அவரிடமும் இல்லை, எங்களிடமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். இரட்டைத் தலைமையா என்பது பிரச்சினை கிடையாது. கூட்டுத் தலைமையாக செயல்படும் என்பதுதான் ஜெயலலிதா இறந்த பிறகு இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்.

சசிகலா தினகரன்
நாங்கள் இந்த அறைகூவல் விடுத்ததன் நோக்கமே எங்களுக்கு விருப்பு , வெறுப்பு ஏதும் இல்லை என்றார். ஒன்றுபட்ட அதிமுக என்றால் அதில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் வருவார்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் எங்களை பொருத்தமட்டில் எம்ஜிஆருடன் உடனிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டவர்கள், இந்த இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள். ஜெயலலிதா காலத்தில் இந்த இயக்கத்திற்கு பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக் கொண்டு கழகம் வெற்றி நடை போட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் சசிகலா, தினகரனுடனோ , அவர்கள் எங்களுடனோ போக வேண்டும் என்ற நிலை இல்லை. அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்.

சசிகலா, டிடிவி தினகரன்
அப்போது செய்தியாளர்கள் சசிகலா, டிடிவி தினகரனும் இணைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ், நான் யாராக இருந்தாலும் என சொல்லிவிட்டேனே, அதில் சின்னம்மாவும் டிடிவி தினகரனும் இருக்கிறார்கள் போதுமா என கேட்டுவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டார் ஓபிஎஸ். இந்த முறை நேரடியாக சசிகலாவுக்கும் தினகரனுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications