ஓ.பன்னீர்செல்வம் 6 முறை போன் செய்தும் நயினார் நாகேந்திரன் எடுக்கலை! ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க அனுமதி கோரிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உண்மையை மறைக்கிறார் என ஓபிஎஸ் தரப்பு விமர்சித்துள்ளது. மேலும் பிரதமரை சந்திக்க அனுமதி கடிதம் கொடுத்துவிட்டு, நயினாருக்கு 6 முறை ஓபிஎஸ் போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினம் என்பவர் கூறியிருப்பதாவது: பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க அனுமதி கோரிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உண்மையை மறைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என நயினார் நாகேந்திரனிடம் சொல்லிவிட்டுதான் ஓபிஎஸ் கடிதம் கொடுத்திருந்தார். அப்படியிருக்கும் போது தனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் எப்படி சொல்கிறார்?
ஓபிஎஸ் கொடுத்த கடிதம்
ஓபிஎஸ் கொடுத்த கடிதம் எப்படி ஊடகங்களுக்கு சென்றது? பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றதும், ஓபிஎஸ், நயினார் நாகேந்திரனுக்கு 6 முறை தொலைபேசியில் அழைத்தார். அந்த 6 முறையும் அவர் ஒரு முறை கூட போனை எடுத்து பேசவில்லை.
போனை எடுக்காத ஓபிஎஸ்
காலை 2 முறை, மதியம் 2 முறை, இரவு 2 முறை என மூன்று வேளையும் போன் செய்தும் நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் போனை எடுக்கவில்லை. இறுதியாக ஓபிஎஸ் தனது போனிலிருந்து வாட்ஸ் ஆப்பில் , நயினார் நாகேந்திரனுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார்.
பிரதமர் மோடி
அதில், பிரதமர் மோடியை நான் பார்க்க வேண்டும். அதற்கு அனுமதி வாங்கிக் கொடுங்கள். இது தொடர்பாக உங்களுக்கு போன் செய்த போது நீங்கள் எடுக்கவில்லை. அதனால் மெசேஜ் அனுப்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
உண்மையை மறைக்கும் நயினார்
அப்படி இருக்கையில் எப்படி தான் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என நயினார் தெரிவிக்கிறார் என தெரியவில்லை. அதாவது உண்மையை மறைக்கிறார். இவ்வாறு சுப்புரத்தினம் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா
கடந்த ஜூலை 27 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற மன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அப்போது அவரை சந்திக்க, தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அனுமதி கிடைத்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி கிடைக்காததால் அவர் தரப்பு கடும் அதிருப்தியில் இருந்தது.
கூட்டணி
இதையடுத்து என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் தரப்பு நேற்று அறிவித்தது. மேலும் ஓபிஎஸ் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாகவும் சொல்லப்பட்டது. மேலும் கூட்டணி குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
நயினார் சொல்வது என்ன
ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்யும் நோக்கில் பாஜக ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: பாஜகவுத்து எதிராக அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக ஓபிஎஸ்ஸுடன் தொலைப்பேசியில் பேசினேன்.
பிரதமர் மோடியை சந்திக்க வைக்க ரெடி
அப்படி பேசிய போதிலும் அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார். அவருக்கு சொந்த பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை. அவரது முடிவு குறித்து கருத்து சொல்ல முடியாது. முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்ததற்கு தொகுதி பிரச்சினையாக இருக்கலாம். அல்லது சொந்த பிரச்சினையாக கூட இருக்கலாம். ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால் பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி பார்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்குத்தான் ஓபிஎஸ் தரப்பு கொந்தளித்துள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications