அதிமுகவின் உண்மையான உரிமையாளர் மோடியாம்! ஒப்புதல் அளித்தது பன்னீர் செல்வமாம்! ஜோதிமணி ‛சுளீர்’
சென்னை: ‛‛அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடி என்று ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால்ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திர மோடி என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும் '' என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி செய்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் உள்ளார். துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். இந்நிலையில் தான் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இதற்கிடையே ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர்கள் ஓட்டி வருகின்றனர். இதனால் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தொடர்ந்து ஆலோசனை
அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்து தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓ பன்னீர்செல்வம் இன்றும் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது தம்பிதுரை ஓ.பன்னீர்செல்வதை நேரில் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே அதிமுக மாவட்ட செயலாளர்களை அணி சேர்ப்பதற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பன்னீர் செல்வம் பேட்டி
இந்நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் சந்தித்த அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது, ‛‛அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே கட்சி சட்ட விதி. ஜெயலலிதா மறைவுக்கு பின் நானும் பழனிசாமியும் இணைந்தபோது பொதுச்செயலாளர் பதவியில் யாரும் இருக்கக் கூடாது என முடிவு செய்து இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.

மோடி சொன்னதால் தான்..
அப்போது எனக்கு துணை முதல்வர் அமைச்சர் பதவி தேவை இல்லை என்றேன். என்னை ஒருங்கிணைப்பாளராக்கினர். 2 நாட்கள் கழித்து ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருவரும் கையெழுத்திட உரிமை உள்ளது என்றனர். அதற்கு மதிப்பளித்து இருவர் கையெழுத்திடுவதை ஏற்றேன். பிரதமரை சந்தித்தபோது அவர் துணை முதல்வர் பதவியை ஏற்கும்படி அழுத்தம் கொடுத்ததால் ஏற்றேன்; நன்றாகத் தான் போனது. ஒற்றைத் தலைமை கோஷம் ஏன் உருவானது என்பது எனக்கே தெரியவில்லை'' என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கூறினார்.

ஜோதிமணி விமர்சனம்
ஓ. பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சு தற்போது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், கரூர் எம்பியுமான ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில், "அதிமுகவின் உண்மையான உரிமையாளர் நரேந்திர மோடி தான் என்று ஓபிஎஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது எட்டிக்கூடப் பார்க்காதவர் நரேந்திர மோடி என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications