அரசு ஊழியர்கள் தலையில இடி.. பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை? போராட்டம் உறுதி - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வந்த அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் போராட்டம், மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தம் தவிர வேறு வழியில்லை என அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் முக்கிய கோரிக்கைகளில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதே முதன்மையானதாக உள்ளது.
இதற்கு கூடுதலாக, அரசு துறைகளில் நீண்ட காலமாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய பணிநியமனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அரசு ஊழியர் போராட்டம்
இந்த நிலையில், ஜாக்டோ - ஜியோ மற்றும் போட்டா ஜியோ அமைப்புகள் சார்பில், வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய மூன்று அமைச்சர்கள் பங்கேற்றனர். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
அமைச்சர் குழு பேச்சுவார்த்தை
ஆனால், நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முக்கிய கோரிக்கையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு தரப்பில் எந்தவிதமான உறுதியான அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடியே போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்
இந்நிலையில், சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் சார்பில், வரும் ஜனவரி 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என அந்த இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் உறுதியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உண்ணாவிரதம், பேரணி, தர்ணா, தொடர் காத்திருப்பு போராட்டம் என 72க்கும் மேற்பட்ட போராட்டங்களை அரசு ஊழியர்கள் நடத்தியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
ஆனால், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முதல்வர் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார். குழு அமைத்தல், அறிக்கை பெறுதல், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் என நான்கு ஆண்டுகள் காலத்தை அரசு வீணடித்துவிட்டது. மேலும், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அரசு ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
கடந்த நான்கு ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அமைச்சர்கள் தரப்பில் எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும் அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில அமைப்புகளுக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டது. இதனால், சிபிஎஸ் இயக்கம் அறிவித்தபடி, வரும் ஜனவரி 21ல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் உறுதியாக தொடங்கும் என்றும், தேர்தலுக்கு முன்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும்" என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications