முதல்வர் பதவிக்காக ஓபிஎஸ் யாகம் நடத்தியுள்ளார்.. ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு!
தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சென்னை: தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் இன்று அதிகாலை யாகம் நடத்தப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அறை புதுப்பிக்கப்பட்டதால் யாகம் நடத்தியதாக தகவல்கள் வருகிறது. இந்த யாகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சோழிங்கநல்லூர் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஸ்டாலின் தனது பேச்சில், சென்னை தலைமை செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார். அதிமுக அரசை காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார். மீண்டும் முதல்வர் பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருகிறார்.
எடப்பாடி சிறைக்கு சென்றால் தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார். கோட்டை அனைத்து மதத்தினருக்கும் சமமானது அங்கு யாகம் நடத்த அதிகாரம் கொடுத்தவர் யார்?. தலைமை செயலகத்தில் யாகம் நடத்த அது என்ன ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்தா?
ஆளும் அதிமுக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும். கொடநாடு விவகாரத்தில் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. முதல்வர் இதில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர், துணை முதல்வர் பதவி விரைவில் காலியாகும். இதை சொன்னால் என் மீது முதல்வர் வழக்கு போடுவார்கள். என் மீது முடிந்தால் முதல்வர் வழக்கு பதியட்டும், நான் அதற்குத்தான் பேசுகிறேன். முடிந்தால் வழக்கு போடட்டும், சவால் விடுகிறேன் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications