தாமரையில் நிற்க நெருக்கடி.. போட்டியிடவே வேண்டாம்.. பின்வாங்கும் ஓ பன்னீர்செல்வம்? என்ன நடக்குது?
சென்னை: லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சென்னையில் இன்று நடக்க உள்ள ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது எம்பியாக உள்ள ஓ பி ரவீந்திரநாத் போட்டியிடுவரா? போட்டியிட்டால் எந்த சின்னத்தில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திப்போம் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வந்தார். அந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அவர் தொடர்ந்து உறுதியாக பேசி வந்தார். ஆனால் தொடர்ந்து கூறி வந்தாலும், சின்னம் கிடைக்காத நிலை இருப்பதால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு குறைவு , தாமரையில் போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியதாக தெரிகிறது. ஆனால் தாமரையில் போட்டியிட்டால் ஓ பன்னீர்செல்வம் பாஜக பக்கம் சென்றுவிட்டதாக மாறும். அதிமுகவிற்கு உரிமை கோருவதில் அர்த்தம் இல்லாமல் போகும்.
இதனால் லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கூட்டணி; பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க இன்று பாஜக சார்பாக கையெழுத்து போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஓ பன்னீர்செல்வம் முன்னுரிமை: 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். எடப்பாடி இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க டெல்லி முடிவு செய்துள்ளதாம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சின்னம் பிரச்சனை காரணமாக லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் மோடி - ஓபிஎஸ் மீட்டிங் நடக்கும் என்றும் கூறுகின்றனர் பாஜகவினர். இன்று இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,
-
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்!












Click it and Unblock the Notifications