Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்கேடு கெட்டாலும் எடப்பாடி No..உதறிய OPS! அறிவாலயமா? பனையூரா? பன்னீர்செல்வத்தின் Revenge பாலிடிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. நேற்று ஆலோசனை நடைபெற்ற நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எந்த காரணத்தை கொண்டும் அதிமுக இருக்கும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்கின்றனர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். மேலும் விஜய் அல்லது திமுகவை வெற்றி பெற வைத்து எடப்பாடியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ்-ன் எண்ணம் எனவும், அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்கின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாஜக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், ஒவ்வொரு கட்சியும் தங்களது அரசியல் கணக்குகளை மீண்டும் மீண்டும் போட்டு பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, கூட்டணியை வலுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், இதுவரை எந்த முக்கிய கட்சியும் அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக அறிவிப்பு வெளியாகவில்லை.

O Panneerselvam edappadi palaniswami vijay

அதிமுக கூட்டணி பிரச்சனை

இந்த சூழலில், அதிமுக கூட்டணியை அமைக்கும் பணியில் பாஜக நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நேற்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பாஜக தரப்பில் சுமார் 50 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதிமுக தரப்பில் 23 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாஜக தமிழக திட்டம்

இந்த ஆலோசனையில் நடிகர் விஜயின் அரசியல் நகர்வுகள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் ஒரு "ஸ்பாய்லர்" ஆக செயல்படலாம் என்றும், அவரது அரசியல் செயல்பாடுகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு வங்கியை பாதிக்கக் கூடாது என்றும் பியூஷ் கோயல் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஓ.பன்னீர்செல்வம்

ஆனால், இந்த தகவல்களுக்கு முற்றிலும் மாறாக, நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தொண்டர் உரிமை மீட்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் எந்த திட்டமும் இல்லை என்று அவர் தெளிவாக தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு "நல்ல பாடம் புகட்டுவோம்" என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த 11 தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளதாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமையே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், இபிஎஸுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையே, அதிமுக கூட்டணியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் இணைக்க முயற்சி செய்தாலும், அது வெற்றியளிக்கவில்லை. தற்போது பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை அணுகி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு வருகிறார். மேலும், செங்கோட்டையன் தலைமையில் தவெக சார்ந்த அணியை கூட்டணியில் இணைக்கவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம் ரிவெஞ்ச் அரசியல்

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வெளியிடும் தகவல்கள் அதிமுக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் அதிமுகவில் இருந்த தன்னை கட்சியில் மதிக்காமல் ஓரங்கட்டிய எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே ஓபிஎஸின் நிலைப்பாடு என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்காவிட்டாலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரக்கூடாது என்பதுதான் ஓபிஎஸின் திட்டம் என்றும் சொல்லப்படுகிறது.

பாஜக-ஓபிஎஸ்-விஜய்

தனிப்பட்ட செல்வாக்கும், சமுதாய அடிப்படையிலான செல்வாக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்னும் இருப்பதால், அதை எடப்பாடிக்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார் எனவும் பேசப்படுகிறது. இதன் காரணமாக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், தேவையான சூழ்நிலை ஏற்பட்டால் திமுகவுடன் கூட கூட்டணி சேர ஓ.பன்னீர்செல்வம் தயங்கமாட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில், 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள், அதிமுக, பாஜக, ஓபிஎஸ், விஜய் ஆகியோரின் அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+