நவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு... பரபரக்கும் அரசியல் களம்
Recommended Video
சென்னை: நவம்பர் 24-ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் நவ.24-ம் தேதி காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழு நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் சூழலில், அதிமுக பொதுக்குழு 24-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நவ.24-ல் கூட்டம்
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.கேட்டுக்கொண்டுள்ளனர்.

வானகரம் தேர்வு
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் தான் நடைபெறும். ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் பொதுக்குழுவை கூட்டுவது ஜெயலலிதா வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், முன் கூட்டியே அதிமுக பொதுக்குழுவுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா வழியில் அவர் உயிருடன் இருந்தபோது நடத்தப்பட்ட அதே மண்டபத்தை அதிமுக தலைமை தேர்வு செய்திருக்கிறது.

அமைப்பில் மாற்றம்?
அதிமுக பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தல் பற்றியும், கட்சியின் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை கொண்டு வருவது பற்றியும், விவாதிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கிறது.

2 ஆண்டுகளுக்கு பின்பு
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அதிமுகவில் கடைசியாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்குபிறகு 2018-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுக்குழுவை கட்சித் தலைமை ஏனோ நடத்தவில்லை. இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுக்குழு நடைபெறவுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு பற்றிக்கொண்டது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications