அதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
vikkiravandi, nanguneri by election : திமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு
சென்னை: விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மிகுந்த கவனமுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் எனவும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றிக்கனியை கழகத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் செயலாற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் அவர்கள் பட்டியலிட்டுள்ளது பின்வருமாறு;
- வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அதிமுக வேட்பாளர்களால் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் காலை 6 மணிக்கே செல்ல வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வாக்குபதிவு இயந்திரங்களில் உள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
- பதிவான வாக்குகளையும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளையும் ஒரே எண்ணிக்கையில் உள்ளதா என்பதை ஒப்பிட வேண்டும்.
- ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தது என்பதை எழுதி வைத்து சரிபார்க்க வேண்டும்.
- தேர்தல் அதிகாரியிடம் சரிபார்த்த பின்னரே அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக்கட்சிக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
- திமுகவினர் தில்லு-முல்லுவில் ஈடுபடுகிறார்களா என்பதை விழிப்போடு முகவர்கள் கண்காணிக்கவும்.
- அதிமுக வேட்பாளர்களின் முகவர்கள், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வெளியே வர வேண்டும்.
மேற்கண்ட இந்த அறிவுறுத்தல்களை பட்டியலிட்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது அதிமுக தலைமைக்கழகம்.
More From
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications