அந்த 25 எம்எல்ஏக்கள் யார் யார்? கொங்குவில் ஓபிஎஸ்ஸின் பிரம்மாண்ட மாநாடு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்
சென்னை: எடப்பாடி பழனிசாமி பக்கமிருந்து ஓபிஎஸ் பக்கம் தாவும் 25 எம்எல்ஏக்கள் யார் யார்? என்பது குறித்து ஒரு தகவலை கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என்ற மோதலில் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிய ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து "அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார்" என கோஷமிட்ட கோஷ்டிகள் எல்லாம் தற்போது ஓபிஎஸ் பக்கம் தாவி வருகிறார்கள்.

6 எம்எல்ஏக்கள்
தற்போதைய நிலவரப்படி ஓபிஎஸ்ஸுக்கு 6 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ்ஸுக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆதரவு கொடுத்தார் . அப்போது அவர் கூறுகையில மேலும் நிறைய எம்எல்ஏக்களும் விரைவில் ஓபிஎஸ் பக்கம் வருவர் என்றார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்ஸும் நிறைய எம்எல்ஏக்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றார். இந்த நிலையில் 25 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வருகை தரவுள்ளார்கள் என கோவை செல்வராஜ் புதுகுண்டை வீசியுள்ளார். ஓபிஎஸ் அணி அதிமுகவின் கோவை மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை மக்களிடம் அறிமுகப்படுத்தியது ஓபிஎஸ்தான்.

அவமானம்
அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்தி கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு பணம் பதவி இரண்டும்தான் தேவை. ஓ பன்னீர் செல்வம் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் கட்சியை தொடக் கூட முடியாது. துரோகம் செய்து பழக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி விரைவில் காணாமல் போய்விடுவார்.

25 எம்எல்ஏக்கள் யார்?
கோவை மாநகரில் செப்டம்பர் மாதம் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அந்த 25 எம்எல்ஏக்களும் யார் என்பது தெரியவரும். செயல்வீரர்கள் கூட்ட மேடையில் அந்த 25 எம்எல்ஏக்களும் மேடை ஏற்றப்படுவார்கள் என்றார். 40 எம்எல்ஏக்கள், 30 எம்எல்ஏக்கள், 25 எம்எல்ஏக்கள் என நாள்தோறும் ஒரு செய்தி வருகிறது. ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது செல்வராஜ் கூறியது போல் கோவை மாநாட்டில்தான் தெரியும் போல!
-
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications