மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மீது பழியை போட்ட ஓபிஎஸ்.. தர்மயுத்தம் 2.0 தொடங்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தேனி: தர்மயுத்தம் 2.0 தொடங்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரை ஓபிஎஸ் கை காட்டி இருக்கிறார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்திய போது, அதற்கு ஒப்புக்கொள்ளாமல் பொதுகுழுவுக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றதே ஓபிஎஸ் என்பது விவாதமாகி இருக்கிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஓபிஎஸ் எந்த முடிவையும் எடுக்காமல் தாமதித்து வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளரும், ராஜ்ய சபா எம்பியுமான தர்மர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார்.

OPS

இதனால் வெல்லமண்டி நடராஜன் மற்றும் உசிலம்பட்டி ஐயப்பன் ஆகிய இருவர் மட்டுமே ஓபிஎஸ் உடன் இருக்கின்றனர். இப்படியான நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பின் ஓபிஎஸ் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் போட்டி என்ற முடிவு எடுக்கவில்லை. தனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை.

அதிமுகவை மீட்க வேண்டும் என்பதற்காகவே சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? தேர்தலில் போட்டியிட நாங்கள் ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கவில்லை. எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி இணைந்துவிட்டனர். இப்போது நானும் ஒன்றிணைய ரெடி? அவர்கள் இருவரும் ரெடியா? என்று கேட்டு சொல்லுங்கள் என்றார்.

தொடர்ந்து தர்ம யுத்தம் 2.0 தொடங்கப்பட காரணமே மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் தான் என்று குற்றம்சாட்டினார். மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் இருவரும் திமுகவில் இணைந்துவிட்ட சூழலில், அவர்கள் மீது ஓபிஎஸ் குற்றம்சாட்டி இருப்பது விவாதமாகி இருக்கிறது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல் எழுந்த போது, இபிஎஸ் தரப்பில் நிர்வாகிகள் ஓபிஎஸ் உடன் பேசினார்கள்.

அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், என்ன நடந்தாலும் ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்து போடும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதனால் பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். அப்போதே ஓபிஎஸ் விட்டுக் கொடுத்திருந்தால், அதிமுக பிரிய வேண்டிய அவசியமே வந்திருக்காது. அதிமுக பொதுக்குழு சம்பவமே தர்மயுத்தம் 2.0க்கு காரணமாக அமைந்தது.

இப்போது திடீரென மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரே 2வது தர்ம யுத்தத்திற்கு காரணம் என்று ஓபிஎஸ் பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிராயுதபாணியாக உள்ள ஓபிஎஸ், ஏதோ ஒரு வகையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+