Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்! இலவு காத்த கிளியான ஓபிஎஸ்..முதுகில் குத்திய பாஜக! அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை நம்பி அதிமுகவில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியை சந்தித்து அனுமதி கேட்டும் அது கிடைக்காத நிலையில் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள மதுரை பொதுக்கூட்டத்தில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்றும், விஜய்யுடன் அவர் கூட்டணி சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் முக்கியமானவர் ஓபிஎஸ். டிடிவி தினகரனுக்கு பிறகு தேனியில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார். சிறையிலிருந்து ஜெயலலிதா வந்ததும் பதவியை ஒப்படைத்துவிட்டு அமைச்சராக தொடர்ந்தார் ஓபிஎஸ்.

இதனால் தனக்கு சிக்கல் வரும் போதெல்லாம் ஜெயலலிதா முதலமைச்சராக நியமித்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இடைக்கால முதல்வரான ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா கொடுத்த நெருக்கடியால் தர்ம யுத்தத்தை தொடங்கி, அவர் சிறை சென்றதும், எடப்பாடி பழனிச்சாமி உடன் கைகோர்த்தார் ஓ.பன்னீர்செல்வம்.

O Panneerselvam Actor Vijay BJP

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆதரவால் ஆட்சியை நிறைவு செய்த எடப்பாடி பழனிச்சாமி, அதற்கு பிறகு ஓபிஎஸ்ஐ கட்டம் கட்ட தொடங்கினார். ஒற்றை தலைமை கோரிக்கையால் ஓபிஎஸ் தனி அணியாக நின்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து டெல்லி வரை சட்டப் போராட்டம் நடத்தியும் அதிமுகவில் மீண்டும் நுழைய முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி பிளவுபட்ட நிலையில் பாஜக அணியில் சேர்ந்த ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

அதிமுகவின் அடையாளமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தாலும், அதிமுக வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் ஓபிஎஸ் தரப்பு மீது இபிஎஸ் தரப்புக்கு கோபம் அதிகரித்தது. எந்த காலத்திலும் ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என விரும்புகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

இதை அடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்று அமைப்பை ஆரம்பித்து வரும் ஓபிஎஸ் அடிக்கடி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆதரவாளரான ரஞ்சித் குமார் காலில் கூட விழுகிறோம் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என பேசினார். ஆனால் காலம் கடந்து விட்டது என ஒரே வரியில் பதிலளித்தார் எடப்பாடி. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இது ஒரு புறம் இருக்க பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார். பாஜக கூட்டணியில் தான் தொடர்கிறேன் என்பதை அறிவிக்க வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்பார்ப்பு. ஆனால் மோடியை சந்திக்க பன்னீர் செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர். பாஜக பேச்சை கேட்டு தான் வெளியே வந்தேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்காக ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கழற்றிவிட்டதாக கொந்தளிக்கின்றனர்.

அந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மிகப்பெரிய மாநாட்டை நடத்துகிறது. தென்மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநாட்டில் புதிய கட்சி கொடி உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து அறிவிப்பார் என அறிவிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக விஜயுடன் கைகோர்த்து சட்டமன்றத் தேர்தலை ஓபிஎஸ் சந்திக்கலாம் என கூறுகின்றனர். தாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும் தன்னை ஏமாற்றிய அதிமுகவும் பாஜகவும் ஜெயிக்க கூடாது என்பதுதான் ஓபிஎஸ்-ன் திட்டம் என சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+