ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?
சென்னை: ஒரு காலத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேனிக்குள் குறிப்பாக போடி தொகுதிக்குள் சுருங்கி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுகவில் அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணல் செய்தவர் இன்று ஒரு தொகுதிக்கு திமுக தலைமையிடம் நேர்காணல் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக அளவில் அவரது ஆதரவாளர் வட்டம் மிகக் குறுகிய அளவுக்கு சுருங்கி விட்டதாக சொல்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என பல்டிகளும் அரங்கேறி வருகிறது. அப்படி நடந்த ஒரு திரைக்கதையில் திடீர் திருப்பம் தான் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது.

மூன்று முறை முதலமைச்சர், அதிமுகவின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் என உச்சபட்ச பதவிகளை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம். இன்று திமுகவில் சாதாரண மாவட்ட செயலாளருக்கு இணையான பதவி கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.
ஓபிஎஸ் அரசியல் சரிவு
அவசரத்தில் அவர் எடுத்த முடிவு அவரது ஆதரவாளர் வட்டத்தை வெகுவாக சுருங்க வைத்து விட்டதாக சொல்லி புலம்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு எந்தவித பொறுப்பும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் திமுகவில் சேர்ந்தவுடன் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தஞ்சம் புகுந்தவர்களுக்கும் அமைப்புச் செயலாளர், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் வழங்கப்பட்டன. ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என ஏற்கனவே சொன்னது போல பல பதிவுகளை வகித்த ஓபிஎஸ்-க்கு இன்னும் பொறுப்பு வழங்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்.
போடி தொகுதி
இந்த நிலையில் போடி தொகுதியில் போட்டியிட விருப்பம் மனு தாக்கல் செய்திருக்கும் ஓ.பன்னீர் செல்வத்திடம் நேற்று நேர்காணல் நடத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். அதிமுகவில் இருந்தபோது 234 தொகுதிகளுக்கும் விருப்பம் பெற்று நேர்காணல் நடத்திய ஓ பன்னீர்செல்வம் இன்று ஒரு வேட்பாளராக ஒரு தலைமையின் முன்னால் அமர்ந்திருப்பது காலத்தின் கட்டாயம் என்கின்றனர். அதற்கு அவர் எடுத்த தவறான முடிவுகளும் காரணம் என்கின்றனர்.
முக்குலத்தோர் வாக்கு வங்கி
அது மட்டும் அல்லாமல் முக்குலத்தோர் வாக்கு வங்கி என்ற ஒன்றை காரணம் காட்டி பாஜகவிடும் பல பலன்களை பெற்று அவர் தற்போது பாஜகவையும் பகைத்துக் கொண்டு, எடப்பாடியையும் பகைத்து, சின்னம்மா என கூவி கூவி அழைத்த சசிகலாவையும் பகைத்துக் கொண்டு திமுகவில் ஐக்கியம் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் தனித்துப் போட்டிருந்தால் கூட ஐந்து சதவீத வாக்குகள் ஆவது தென் மாவட்டங்களில் கிடைத்திருக்கும். ஆனால் திமுகவில் சேர்ந்ததன் மூலம் போடி தொகுதியில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிட்டார் ஓ பன்னீர்செல்வம் என புலம்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து ஓபிஎஸ் பிரிந்த போது அவர் பின்னால் ஏராளமான மாவட்ட செயலாளர்களும் எம்எல்ஏக்களும் அணி திரண்டனர். ஆனால் காலப்போக்கில் ஓபிஎஸ்-ன் குழப்பமான முடிவுகளால் திமுக - அதிமுகவில் அவர்கள் தஞ்சம் புகுந்த நிலையில், தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ் தற்போது கடைசி வாய்ப்பாக திமுகவில் இணைந்து இருக்கிறார். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் எந்தவித தாக்கத்தையும் ஓபிஎஸ் ஏற்படுத்த முடியாது.
அதிமுக, அமுமுக, சசிகலா
சொல்லப்போனால் போடி தொகுதியில் நின்றாலும் அவர் வெல்ல முடியுமா என்பது கேள்விக்குறிதான். அதிமுக, அமுமுக, சசிகலா ஆதரவு நிர்வாகிகள் நிச்சயம் ஓபிஎஸ்-க்கு எதிராக வேலை செய்வார்கள். அது மட்டுமல்லாமல் நேற்றுவரை அதிமுகவிலிருந்து விட்டு திடீரென திமுகவில் இணைந்ததன் மூலம் திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் நிச்சயம் ஓபிஎஸ் எதிராக உள்ளடி வேலை பார்ப்பார்கள். இதனால் டெபாசிட்டாவது மிஞ்சுமா என்பது தேர்தல் முடிவுகளின் போது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
-
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
பாஜக உள்ள வந்துரும்ங்க தோழர்.. சிபிஐக்கு 5 தொகுதியை தள்ளிவிட்ட திமுக! 2021ல் என்ன நடந்தது தெரியுமா? -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
என் நிலைமைய பாத்தீங்களா? தைலாபுரம் பக்கம் தலை காட்டாத அடிபொடிகள்! புலம்பித் தவித்த அய்யா ராமதாஸ் -
வரும் தேர்தலில் விஜய்யால் போட்டியிட முடியாதா? மனைவி சங்கீதா வைக்கும் செக்? லிஸ்ட்லயே இல்லாத ட்விஸ்ட் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
NDA கூட்டணியில் விஜய்? எஸ்பி வேலுமணி எடுக்கும் கடைசி கட்ட முயற்சி.. முக்கிய புள்ளி சொன்ன தகவல் -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம்












Click it and Unblock the Notifications