அதிமுகவில் இணைய தயார்.. எந்தக் கன்டிஷனும் இல்லையாம்! உடைத்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம்! அதகள அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதிமுகவின் அனைத்துத் தொண்டர்களும் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நான் இணைவேன் என அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக டிடிவி தினகரன் பேசி இருந்த நிலையில், ஓபிஎஸ்ஸும் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் அந்த கூட்டணியில் ஏற்கனவே இருந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர், பாஜக கூட்டணியில் தான் இருக்கின்றனர் என பாஜக கூறி வருகிறது.

ஆனால் அவர்கள் தங்கள் கூட்டணியில் இல்லை என அதிமுக மறுத்துள்ளது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் அவரது ஆதரவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

o panneerselvam aiadmk bjp

அந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், எந்த நிபந்தனையும் விதிக்காமல் அதிமுகவின் நான் இணைவேன் கூறி உள்ளார். ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்," அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுகவின் அனைத்துத் தொண்டர்களும் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நான் இணைவேன். எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். என்னுடன் இருப்பவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் பதவி வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி எனது தலைமையில் மதுரையில் நடைபெறும் மாநாடு வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மாநாடாக இருக்கும். மாநாட்டுக்கு, சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும். வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி எனது தலைமையில் மதுரையில் நடைபெறும் மாநாடு வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மாநாடாக இருக்கும். மாநாட்டுக்கு, சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும்" என்றார்.

முன்னதாக மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக சில தகவல்களை அங்கிருந்த சில நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர். அதன்படி," ஜெயலலிதாவின் ஆசி படி அதிமுகவை மீட்பதற்கான என்னுடைய சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இதுவரை சட்டப் போராட்டத்தில் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது தர்மயுத்தம் நடத்தி வருகிறோம். இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் நிச்சயம் நம்முடைய நோக்கம் நிறைவேறும்.

மக்களை நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டும்தான் முதலமைச்சராக முடியும். தற்போது சில முடிவுகளை எடுத்திருக்கிறேன். ஆனால் அது தொடர்பாக வெளியே சொல்ல முடியாது. ஆனால் விரைவில் அது என்ன என்பது உங்களுக்கு தெரியும். வருகிற செப்டம்பர் மாதம் நான்காம் தேதி மதுரையில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் நம் எதிர்கால திட்டங்கள் குறித்து அறிவிப்பேன் அதுவரை நீங்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்றாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+