சோலி முடிஞ்சு.. ஒர்க் அவுட் ஆகாத ஓ.பன்னீர்செல்வத்தின் ப்ளான்! கழற்றி விட்ட பாஜக.. கண்டுக்காத விஜய்?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது குழப்பமான மனநிலையில் இருக்கிறார். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாஜகவும் ஏமாற்றிய நிலையில், அடுத்த கட்டமாக என்ன செய்வது என ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் விஜயுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சில ஆதரவாளர்கள் அறிவுறுத்திய நிலையில், அது தொடர்பாக அணுகிய போதும் விஜய் தரப்பு சந்திப்பை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை அனைத்து கட்சிகளும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கின்றன. அதற்காக தற்போதையிலிருந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், திமுக கூட்டணியும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான்.
அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் இன்னும் சில குழப்பங்கள் நிலவுகிறது. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும், எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார்.

ஓ பன்னீர்செல்வம்
அதே நேரத்தில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது என இபிஎஸ் கட் அண்ட் ரைட்டாக பேசி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஜக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தது பாஜக. காரணம் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர்களுக்கு அதிமுகவில் இனி இடமே இல்லை எனவும் கூறினார்.
அதிமுக பாஜக கூட்டணி
தற்போது கூட்டணி என்று வந்து விட்ட நிலையில், எம்எல்ஏ ஆசையில் இருக்கும் பாஜக தலைகள், எடப்பாடிக்கு ஆதரவாக பேச, கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்-ஐ வெளியேற்ற வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இந்த நிலையில் எப்படியும் பழனிச்சாமி தனக்கு எதிராக வேலை செய்வார் முன்கூட்டியே உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் பேசி இருந்த போதும் அவர் அதற்கு ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
ஸ்டாலின் சந்திப்பு
இதனால் கோபம் அடைந்து பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்தடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் ஓபிஎஸ் ஸ்டாலின் சந்திப்பு நடந்தது. திமுக கூட்டணியில் அவர் இணைய போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவரது ஆதரவாளர்களே அதற்கு தயாராக இல்லை. மேலும் சமூக வலைதளங்களிலும் ஓபிஎஸ்-க்கு எதிராக கண்டனம் வெடித்தது.
விஜயுடன் கூட்டணி
திமுக கூட்டணி முடிவை தள்ளிப் போட்டா கடைசி வாய்ப்பாக தனித்துப் போட்டியிடுவது அல்லது விஜய் உடன் கூட்டணி என்ற நிலையில் இருந்த ஓபிஎஸ் சில சென்னை ஆதரவாளர்கள் மூலம் விஜய் தரப்பை சந்திக்க அனுப்பி உள்ளார். இதை அடுத்து தேர்தல் வியூக நிறுவனம் நடத்தும் நிர்வாகி ஒருவர் மூலம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைக்கும் வாக்குகள் ஓபிஎஸ் வந்தால் கிடைக்காது. மேலும் அரசியல் வாழ்வில் அஸ்தமனத்தில் இருக்கும் ஓபிஎஸ்ஐ கூட்டணியில் சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் எந்த பலனும் இல்லை என விஜய் தரப்பு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக
பல ஆண்டுகள் அதிகாரம் மையமாக இருந்த அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டோம். பாஜகவும் ஏமாற்றி விட்டது. விஜய் தரப்பிலாவது கூட்டணி சேரலாம் என்றால் அதற்கும் வாய்ப்பில்லை எனவே சொந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆவதோடு, பிற பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற விடக்கூடாது என்பதுதான் ஓபிஎஸ்-ன் தற்போதைய எண்ணம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.


Click it and Unblock the Notifications
